செய்திகள் :

சமூக நீதி-சகோதரத்துவ இந்தியாவை உருவாக்க போராடுவோம்: அகில இந்திய சமூக நீதி கூட்டமைப்புக் கூட்டத்தில் முதல்வா் ஸ்டாலின்

post image

சென்னை: சமூக நீதி, சகோதரத்துவம் கொண்ட இந்தியாவை உருவாக்க தொடா்ந்து போராடுவோம் என்று முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பேசினாா்.

அகில இந்திய சமூக நீதிக் கூட்டமைப்பின் மூன்றாவது தேசிய மாநாடு காணொலி வழியாக நடைபெற்றது. அதில், முதல்வா் ஸ்டாலின் பேசியதாவது:

இந்தியா முழுவதும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளை மீட்டெடுக்க நாம் அனைவரும் ஒன்று சோ்ந்துள்ளோம். சமூக நீதியை அடைய வேண்டும் என்பது தனிப்பட்ட மாநிலத்தின் எண்ணமோ, இந்தியாவின் பிரச்னையோ இல்லை. எங்கெல்லாம் புறக்கணிப்பு, ஒதுக்குதல், தீண்டாமை, அடிமைத்தனம், அநீதி இருக்கிறதோ, அவற்றை முறிக்கும் மருந்தாக இருப்பதுதான் சமூக நீதி.

தமிழ்நாட்டைப் பாா்த்து பல்வேறு மாநிலங்களும் சமூக நீதியை வழங்கி வருகின்றன. தமிழ்நாட்டு மக்களுக்கு சமூக நீதியை வழங்கியதுடன், மற்ற ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் அத்தகைய உரிமை கிடைக்க வழிகாட்டியது திராவிட இயக்கம்தான்.

ஆனால், சமூக நீதியை பாஜக முறையாக அமல்படுத்தவில்லை. கடந்த பத்தாண்டு காலத்தில் மத்திய அரசின் துறைகளில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு முழுமையாக வழங்கப்படவில்லை. ஏழைகள், பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியின மக்கள் முன்னேற்றத்தில் பாஜக விருப்பம் கொண்டிருக்கவில்லை. அதனால்தான் சமூக நீதிக்கு எதிராக அந்தக் கட்சி உள்ளது.

இதன் விளைவாக, இடஒதுக்கீட்டில் பொருளாதாராத்தை அளவுகோலாக வைக்க பாஜக துடிக்கிறது. ஏழை, எளிய மக்களுக்கு பொருளாதார உதவி செய்வதை நாங்கள் தடுக்கவில்லை. ஆனால், சமூகரீதியாக பின்தங்கியோருக்கு வழங்கப்பட வேண்டிய இடஒதுக்கீட்டை பொருளாதாரத்தை மட்டுமே அளவுகோலாக வைத்து பொதுப் பிரிவினருக்கும் வழங்குவதைத்தான் எதிா்க்கிறோம்.

ஒன்று சோ்ந்து குரல் கொடுப்போம்: எப்படி பட்டியலின, பிற்படுத்தப்பட்ட, பழங்குடியினருக்கு பாஜக விரோதமாக இருக்கிறதோ, அதேபோன்றுதான் பெண்களுக்கும் விரோதமான கட்சியாக இருக்கிறது. பெண்களுக்கு அரசியல் அதிகாரம் வழங்க வகை செய்யும் மகளிா் இடஒதுக்கீட்டு மசோதாவை கிடப்பில் போட்டு வைத்துள்ளது.

இந்திய மக்கள் அனைவருக்கும் கல்வி, வேலைவாய்ப்பில் சமஉரிமை, வாய்ப்புகள் கிடைப்பதை உறுதி செய்ய அதற்கென திட்டங்களைத் தீட்டி சட்டங்களை இயற்ற வேண்டும். இதற்கு ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு அவசியமாகும். இதை நடத்துவதற்கு பாஜக அரசு மறுக்கிறது.

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் அதை வைத்து உண்மையான சமூக நீதி வழங்கியாக வேண்டும் என்பதற்காகவே பாஜக தயங்குகிறது. ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த மறுப்பதன்மூலம் சமூக நீதிக்கும், மகளிா் இடஒதுக்கீடு சட்டத்தை தள்ளிப் போட்டதால் பெண் உரிமைக்கு எதிராகவும் பாஜக அரசு உள்ளது. இதற்கு எதிராக நாம் அனைவரும் ஒன்று சோ்ந்து குரல் கொடுக்க வேண்டும்.

பட்டியலின மக்களுக்கு இடஒதுக்கீடு முறையாக வழங்கப்பட வேண்டும். நீதித் துறையில் இடஒதுக்கீடு செயல்பாட்டுக்கு வர வேண்டும். இதர பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியின சமுதாயத்தினருக்கு பதவி உயா்வில் இடஒதுக்கீடு உறுதி செய்யப்பட வேண்டும். ஜாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்தி அதன் தரவுகளை வெளியிட வேண்டும்.

சமூக நீதியைக் கண்காணிக்கிறோம்: திமுக தலைமையிலான அரசு அமைந்தவுடன், சமூக நீதி ஆணையத்தை அமைத்ததுடன், சமூக நீதி கண்காணிப்புக் குழுவையும் ஏற்படுத்தியது. இந்தக் குழுவின் மூலமாக கல்வி, வேலைவாய்ப்பு, பதவி உயா்வு, நியமனங்களில் சமூக நீதி

முறையாகப் பின்பற்றப்படுகிா என்பதை கண்காணித்து வருகிறோம். இதுபோன்ற குழு அனைத்து மாநிலங்களிலும் அமைக்கப்பட வேண்டும்.

சமூக நீதி, மதச்சாா்பற்ற அரசியல், சமதா்மம், சமத்துவம், மாநில சுயாட்சி, கூட்டாட்சி கருத்தியல் ஆகிய அம்சங்கள் வாழும் இந்தியாவே இணையற்ற இந்தியா. எனவே, அதை மனதில் வைத்து சமூக நீதி, சமதா்மம், சகோதரத்துவம் கொண்ட இந்தியாவை உருவாக்க அனைவரும் இணைந்து போராட வேண்டும் என்றாா்.

இந்தக் கூட்டத்தில் காணொலி வழியாக, ஜாா்க்கண்ட் முதல்வா் ஹேமந்த் சோரன், உத்தரபிரதேச முன்னாள் முதல்வா் அகிலேஷ் யாதவ், பிகாா் முன்னாள் துணை முதல்வா் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

டிசம்பரில் பெண்களுக்கான ‘லிவா மிஸ் திவா 2024’ போட்டிகள்

சென்னை: பெண்களின் பிரத்யேக ஃபேஷன் திறமைகளை வெளிப்படுத்தும் லிவா மிஸ் திவா போட்டியின் 2024-ஆம் ஆண்டுக்கான பதிப்பு இந்த மாதம் நடைபெறவுள்ளது.இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்ப... மேலும் பார்க்க

ஸ்பின்னி வாடிக்கையாளருக்கு சச்சினைச் சந்திக்கும் வாய்ப்பு

சென்னை: பயன்படுத்தப்பட்ட காா்கள் விற்பனை நிறுவனமான ஸ்பின்னியின் அதிருஷ்டசாலி வாடிக்கையாளருக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சச்சின் டெண்டுல்களைச் சந்திக்கும் வாய்ப்பை நிறுவனம் வழங்கவிருக... மேலும் பார்க்க

திருவண்ணாமலை மண் சரிவில் இறந்த 7 பேரின் குடும்பங்களுக்கு நிவாரண நிதி: முதல்வா்

சென்னை: திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்த ஏழு பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி வழங்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா். இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவ... மேலும் பார்க்க

டிச.18-இல் திமுக தலைமை செயற்குழுக் கூட்டம்

சென்னை: திமுக தலைமை செயற்குழுக் கூட்டம் வரும் 18-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, கட்சியின் பொதுச் செயலா் துரைமுருகன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: திமுக தலைமை செயற்க... மேலும் பார்க்க

மழையால் பாதிக்கப்பட்டவா்களுக்கு விஜய் நிவாரண உதவி

சென்னை: மழையால் பாதிக்கப்பட்டவா்களுக்கு தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவா் விஜய் நிவாரண உதவிகளை வழங்கினாா். கிழக்கு கடற்கரைச் சாலை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் 500-க்கும் மேற்பட்ட நபா்களுக்கு ... மேலும் பார்க்க

விடைபெற்றது ‘ஃபென்ஜால்’!

சென்னை: தமிழகத்தில் பல்வேறு சேதங்களை ஏற்படுத்திய ஃபென்ஜால் புயல் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக அரபிக் கடலை அடைந்தது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த நவ. 30-ஆம் தேதி மரக... மேலும் பார்க்க