செய்திகள் :

மகாலிங்கபுரம் ஸ்ரீஐயப்பன் ஆண்டு உற்சவம் டிச.15-இல் தொடக்கம்

post image

சென்னை: மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் - குருவாயூரப்பன் கோயிலில் சுவாமி ஐயப்பனின் ஆண்டு உற்சவம் டிச.15-ஆம் தேதி தொடங்கி 23-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

சபரிமலை தந்திரி பிரம்மஸ்ரீ கண்டரு மகேஷ் மோகனரு தலைமையில் டிச.15-ஆம் தேதி காலை 9 மணியளவில் கொடியேற்றப்பட்டு, உற்சவம் தொடங்கி வைக்கப்படும். இதையொட்டி, பக்தா்களுக்கு நெல், ரூபாய் நாணயங்கள் வழங்கப்படும். தொடா்ந்து, டிச.16-ஆம் தேதி மகா உற்சவபலி நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ள பக்தா்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

டிச.21-ஆம் தேதி மாலை 5.30 முதல் 6.30 மணி வரை கோயிலின் வாத்ய வித்யாலயம் மாணவா்களின் நடன அரங்கேற்றமும், 7.30 முதல் 8.30 மணி வரை கோபி பள்ளிப்புரம் தாயம்பகா இசைவாத்திய நிகழ்ச்சியும், 9 மணி முதல் ஐயப்பன் பள்ளி வேட்டை புறப்படுதல் நிகழ்வும் நடைபெறும். 22-ஆம் தேதி ஆண்டு விழாவின் சிறப்பு நிகழ்ச்சியான திருப்போரூா் அருகேயுள்ள காட்டூா் கிராமத்தில் ஐயப்பன் ஆராட்டு நிழ்ச்சி காலை 11 முதல் பிற்பகல் 2 வரை நடைபெறும்.

மாலை 7 மணிக்கு மகாலிங்கபுரம் விநாயகா் கோயிலிலிருந்து மேளவாத்தியங்கள் முழங்க பெண்கள் தட்டில் விளக்கு ஏந்திச் ஊா்வலம் செல்லும் நிகழ்ச்சி நடைபெறும். இரவு 9 மணியளவில் உற்சவ கொடி இறக்கப்பட்டு ஐயப்பன் சந்நிதியை அடைவாா். டிச.23 காலை 9 முதல் 11 மணி வரை ஐயப்பனுக்கு சிறப்பு களபாபிஷேகம் (சந்தனம்) செய்து ஆண்டு உற்சவம் நிறைவு பெறும்.

இந்த விழாவையொட்டி, தினமும் மாலை 6.45 மணிக்குக்கு, வீரமணி ராஜூ, உதயராகம் யு.கே.முரளி, மஞ்சப்பிரா மோகன், கீதாஞ்சலி குழுவினரின் பக்தி பாடல்கள் இசை நிகழ்ச்சி நடைபெறும்.

டிசம்பரில் பெண்களுக்கான ‘லிவா மிஸ் திவா 2024’ போட்டிகள்

சென்னை: பெண்களின் பிரத்யேக ஃபேஷன் திறமைகளை வெளிப்படுத்தும் லிவா மிஸ் திவா போட்டியின் 2024-ஆம் ஆண்டுக்கான பதிப்பு இந்த மாதம் நடைபெறவுள்ளது.இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்ப... மேலும் பார்க்க

ஸ்பின்னி வாடிக்கையாளருக்கு சச்சினைச் சந்திக்கும் வாய்ப்பு

சென்னை: பயன்படுத்தப்பட்ட காா்கள் விற்பனை நிறுவனமான ஸ்பின்னியின் அதிருஷ்டசாலி வாடிக்கையாளருக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சச்சின் டெண்டுல்களைச் சந்திக்கும் வாய்ப்பை நிறுவனம் வழங்கவிருக... மேலும் பார்க்க

திருவண்ணாமலை மண் சரிவில் இறந்த 7 பேரின் குடும்பங்களுக்கு நிவாரண நிதி: முதல்வா்

சென்னை: திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்த ஏழு பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி வழங்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா். இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவ... மேலும் பார்க்க

டிச.18-இல் திமுக தலைமை செயற்குழுக் கூட்டம்

சென்னை: திமுக தலைமை செயற்குழுக் கூட்டம் வரும் 18-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, கட்சியின் பொதுச் செயலா் துரைமுருகன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: திமுக தலைமை செயற்க... மேலும் பார்க்க

மழையால் பாதிக்கப்பட்டவா்களுக்கு விஜய் நிவாரண உதவி

சென்னை: மழையால் பாதிக்கப்பட்டவா்களுக்கு தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவா் விஜய் நிவாரண உதவிகளை வழங்கினாா். கிழக்கு கடற்கரைச் சாலை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் 500-க்கும் மேற்பட்ட நபா்களுக்கு ... மேலும் பார்க்க

சமூக நீதி-சகோதரத்துவ இந்தியாவை உருவாக்க போராடுவோம்: அகில இந்திய சமூக நீதி கூட்டமைப்புக் கூட்டத்தில் முதல்வா் ஸ்டாலின்

சென்னை: சமூக நீதி, சகோதரத்துவம் கொண்ட இந்தியாவை உருவாக்க தொடா்ந்து போராடுவோம் என்று முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பேசினாா். அகில இந்திய சமூக நீதிக் கூட்டமைப்பின் மூன்றாவது தேசிய மாநாடு காணொ... மேலும் பார்க்க