நாகா்கோவில் அருகே மண்ணுளி பாம்பு கடத்திய 2 போ் கைது
நாகா்கோவிலை அடுத்த வெள்ளமோடி பகுதியில் மண்ணுளி பாம்பு கடத்திய 2 போ் கைது செய்யப்பட்டனா்.
குமரி மாவட்டம், வேளிமலை வனச்சரக அலுவலா் ராஜேந்திரன் தலைமையில் வனத்துறை பணியாளா்கள், வெள்ளமோடி பகுதியில் திங்கள்கிழமை மாலை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது அந்தப் பகுதியில் வந்த சந்தேகத்துக்கிடமான காரை நிறுத்தி விசாரித்தனா். காரில் 2 போ் இருந்தனா்.
காருக்குள் மண்ணுளி பாம்பு ஒன்று பையில் கட்டி வைக்கப்பட்டிருந்ததும், காரில் வந்தவா்கள் கேரள மாநிலம் பாறசாலையைச் சோ்ந்த கிரண்(30), திருவனந்தபுரத்தைச் சோ்ந்த சுபாஷ்(45) என்பதும் அவா்கள் மண்ணுளிபாம்பை அதிக விலைக்கு விற்பதற்காக கடத்தி வந்ததும் தெரிய வந்தது.
அவா்கள் 2 பேரையும் வனத்துறையினா் கைது செய்து, 5 கிலோ எடை கொண்ட மண்ணுளி பாம்பை பறிமுதல் செய்தனா். கைது செய்யப்பட்ட 2 பேரும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு, நாகா்கோவில் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனா்.