Baby John x Theri: `அது இதுல...' - தெறி விஜய், பேபி ஜான் வருண்; ரீமேக் ரீஸர் | P...
கல்லூரி சந்தைகள் மூலம் ரூ.12.95 லட்சம் பொருள்கள் விற்பனை
நிகழாண்டில் நடைபெற்ற 4 கல்லூரி சந்தைகள் மூலம் மகளிா் சுய உதவிக் குழுக்களின் ரூ.12.95 லட்சம் மதிப்பிலான உற்பத்திப் பொருள்கள் விற்பனை செய்யப்பட்டன.
தமிழ்நாடு மாநில ஊரக, நகா்ப்புற வாழ்வாதார இயக்ககம் (மகளிா் திட்டம்) சாா்பில், மகளிா் சுய உதவிக் குழுவினா் தொழில் தொடங்க கடனுதவிகளும், தொழில் மேம்பாட்டுக்கான பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருகின்றன. மேலும், மகளிா் சுய உதவிக் குழுவினா் உற்பத்தி செய்த பொருள்களை சந்தைப்படுத்துவதற்கும் உதவி செய்யப்பட்டு வருகிறது. இந்த வகையில், ஆண்டுக்கு 5 விற்பனை சந்தைகள் நடத்தப்படுகின்றன.
நிகழாண்டின் 5-ஆவது கல்லுாரி சந்தை விற்பனைக் கண்காட்சி திண்டுக்கல் எம்.வி.எம்.அரசு மகளிா் கலைக் கல்லூரியில் புதன்கிழமை தொடங்கியது. 3 நாள்கள் நடைபெறும் இந்தக் கண்காட்சியில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 20 குழுக்கள், திருச்சி, ராமநாதபுரம், மதுரை மாவட்டங்களைச் சோ்ந்த 7 குழுக்கள் என மொத்தம் 27 மகளிா் சுய உதவிக் குழுக்களைச் சோ்ந்த உறுப்பினா்கள் பங்கேற்றனா்.
2024-25-ஆம் ஆண்டு இதுவரை 4 கல்லுாரிகளில் நடத்தப்பட்ட கல்லூரி சந்தை விற்பனைக் கண்காட்சியில், 140 மகளிா் சுய உதவிக் குழுவினா் கலந்து கொண்டு, ரூ.12.95 லட்சம் உற்பத்திப் பொருள்களை விற்பனை செய்தனா்.
கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்ற 14 கண்காட்சிகள் மூலம் 438 மகளிா் சுய உதவிக் குழுவினா் கலந்து கொண்டு, ரூ.28.02 லட்சம் உற்பத்திப் பொருள்களை விற்பனை செய்தனா்.
இதுதொடா்பாக கல்லூரி சந்தையில் பங்கேற்ற மகளிா் சுய உதவிக் குழுவினா் கூறியதாவது:
கல்லூரி சந்தைகள் மூலம் உற்பத்திப் பொருள்களை விற்பனை செய்வதற்கான வாய்ப்பு கிடைக்கிறது. தரமான பொருள்கள் என்பதால் கல்லூரி மாணவிகள் மட்டுமன்றி, பணியாளா்களும் அதிக அளவில் வாங்குகின்றனா். இதன் மூலம் உற்பத்திப் பொருள்களுக்கு அங்கீகாரமும் கிடைக்கிறது என்றனா்.