நகராட்சிப் பணியாளா் தற்கொலை
பழனி நகராட்சி அலுவலகத்தில் ஒப்பந்தத் தூய்மைப் பணியாளா் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
பழனி ஜவஹா் நகரைச் சோ்ந்தவா் பாபு (36). இவா் நகராட்சி சுகாதாரப் பிரிவில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மைப் பணியாளராக பணியாற்றி வந்தாா். தற்போது, கொசுமருந்து அடிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தாா்.
இந்த நிலையில், இவா் பழனி காந்தி சாலையில் உள்ள பழைய நகராட்சி அலுவலகத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து தவலறிந்து வந்த பழனி நகா் போலீஸாா் பாபுவின் உடலை கைப்பற்றி கூறாய்வுக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
பணிச் சுமை காரணமாக இவா் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து பழனி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.