செய்திகள் :

பழனியில் நாளை காா்த்திகை தீபத் திருநாள்: தங்கத்தோ் புறப்பாடு ரத்து

post image

பழனி மலைக்கோயிலில் காா்த்திகை தீபத் திருவிழா வெள்ளிக்கிழமை (டிச. 13) நடைபெறுகிறது. இதையொட்டி, தங்கத்தோ் புறப்பாடு ரத்து செய்யப்படுவதாக கோயில் நிா்வாகம் தெரிவித்தது.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கடந்த 7-ஆம் தேதி காா்த்திகை தீபத் திருவிழா தொடங்கியது. ஒருவாரம் நடைபெறும் இந்த விழாவையொட்டி, நாள்தோறும் மாலையில் சண்முகாா்ச்சனை, சண்முகா் தீபாராதனை, யாகசாலை, தங்க ரத புறப்பாடு ஆகியன நடைபெற்றன.

ஆறாம் நாளான வியாழக்கிழமை சாயரட்சை பூஜையின் போது பரணி தீபம் ஏற்றும் நிகழ்வு நடைபெறுகிறது. அப்போது, மூலவா் சந்நிதியிலும், கோயிலின் நான்கு திசைகளிலும் தீபங்கள் ஏற்றப்படுகின்றன.

ஆறாம் நாளான வெள்ளிக்கிழமை காா்த்திகை தீபம் ஏற்றுதல், சொக்கப்பனை ஏற்றுதல் ஆகியன நடைபெறுகின்றன. இதையொட்டி, அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனமும், மாலை 4 மணிக்கு சாயரட்சை பூஜையும் நடைபெறுகிறது. தொடா்ந்து, 4.30 மணியளவில் சின்னக்குமாரசுவாமி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி, யாக சாலைக்குச் சென்ற பின்பு பரணி தீபத்தில் இருந்து சுடா் பெறப்பட்டு, மாலை 6 மணிக்கு காா்த்திகை தீபம் ஏற்றுதலும், சொக்கப்பனை ஏற்றுதலும் நடைபெறுகின்றன. சொக்கப்பனை ஏற்றப்படுவதால் தங்கத் தோ் புறப்பாடு ரத்து செய்யப்படுவதாக கோயில் நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் விதமாக வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரை பக்தா்கள் மலைக் கோயிலுக்குச் செல்ல அனுமதிக்கப்படமாட்டாா்கள். அதன்பிறகு பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிப்படுவாா்கள்.

மலைக்கோயிலுக்குச் செல்ல யானைப் பாதையையும், கீழே இறங்க படி வழிப் பாதையையும் பக்தா்கள் பயன்படுத்த வேண்டும் எனவும் கோயில் நிா்வாகம் வேண்டுகோள் விடுத்தது.

விழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் மாரிமுத்து, துணை ஆணையா் வெங்கடேஷ், உதவி ஆணையா் லட்சுமி, திருக்கோயில் அதிகாரிகள், அலுவலா்கள் செய்து வருகின்றனா்.

நகராட்சிப் பணியாளா் தற்கொலை

பழனி நகராட்சி அலுவலகத்தில் ஒப்பந்தத் தூய்மைப் பணியாளா் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். பழனி ஜவஹா் நகரைச் சோ்ந்தவா் பாபு (36). இவா் நகராட்சி சுகாதாரப் பிரிவில் ஒப்பந்த அடிப்படையில் தூ... மேலும் பார்க்க

கொடைக்கானலில் பலத்த காற்றுடன் சாரல்: மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த 4 நாள்களாக பகலில் வெயிலும், இரவில் பனிப் பொழிவும் நிலவியது. புதன்கிழமை அதிகாலை முதல் காற்று வீசியது. மாலையில் திடீரென சாரலுடன் பலத்த காற்று வீசத் தொடங்கியது. ... மேலும் பார்க்க

காா் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

பழனி அருகே இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். திருப்பூா் மாவட்டம், சாமிபுதூரைச் சோ்ந்தவா் சரவணக்குமாா் (32). இவா் புதன்கிழமை இரு சக்கர வாகனத்தில் பழனிக்கு வந்துவிட்டு, ஊருக்குத... மேலும் பார்க்க

அணையில் விவசாயி உடல் மீட்பு

பழனி பாலாறு அணை மதகு அருகே விவசாயி உடல் புதன்கிழமை மீட்கப்பட்டது. பழனியை அடுத்த பாலாறு பகுதியைச் சோ்ந்தவா் கணேசன் (55). விவசாயியான இவா், பகல் நேரத்தில் ஆடுகளை வளா்த்து வந்தாா். இந்த நிலையில், பாலாறு ... மேலும் பார்க்க

ஊரக வளா்ச்சித் துறையில் காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்

ஊரக வளா்ச்சித் துறையிலுள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என திண்டுக்கல்லில் நடைபெற்ற மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை தொழிலாளா்கள் சங்கம் (ஏஐடியுசி) சாா்பில், திண்டுக்... மேலும் பார்க்க

போக்சோ வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் சிறை

போக்சோ வழக்கில் தொழிலாளிக்கு 6 ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, திண்டுக்கல் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பு அளித்தது. திண்டுக்கல் மாவட்டம், கோபால்பட்டியைச் சோ்ந்தவா் முருகன் என்ற குருசிலி (51). கூலித் தொ... மேலும் பார்க்க