செய்திகள் :

சரத் பவாருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து!

post image

தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவாருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சரத் பவார் வியாழக்கிழமை(டிச.12) தனது 84 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

இதையொட்டி அவருக்கு தலைவர்கள், பிரபலங்கள், தொண்டர்கள் என பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வரையில், சரத்பவாருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க |ரஜினி பிறந்த நாள்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

இது தொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:

தேசியவாத காங்கிரஸ் (சரத்சந்திர பவார்) கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு என் நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள்.

பொதுவாழ்விலும் நாட்டின் வளர்ச்சியிலும் தங்களது அளப்பரிய பங்களிப்புகள் பெரும் ஊக்கமாக விளங்குகின்றன.

தங்களது சீரிய தலைமை தொடர, நல்ல உடல்நலத்துடனும் வலிவோடும் தாங்கள் திகழ விழைகிறேன் என தெரிவித்துள்ளார்.

தனுஷ் தொடர்ந்த வழக்கு: நயன்தாரா பதிலளிக்க உத்தரவு!

நடிகை நயன்தாராவுக்கு எதிராக தனுஷ் தொடர்ந்த வழக்கில், நயன்தாரா உள்ளிட்ட மூவரும் ஜன. 8 ஆம் தேதிக்குள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நடிகை நயன்தாராவின் 40-ஆவது பிறந்த நாளையொட்டி, அவரத... மேலும் பார்க்க

பூண்டி ஏரியிலிருந்து உபரி நீர் வெளியேற்றம்: கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

திருவள்ளூர் பகுதியில் பெய்து வரும் கனமழையால் பூண்டி நீர்த்தேக்கத்திற்கு வரத்து நீர் அதிகரித்துள்ளதால், பிற்பகல் 1.30 மணிக்கு வினாடிக்கு 1,000 கன அடி உபரிநீர் கொசஸ்தலை ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளதால் ... மேலும் பார்க்க

கனமழை எச்சரிக்கை: சதுரகிரி மலைக்குச் செல்லத் தடை!

கனமழை எச்சரிக்கை காரணமாக கார்த்திகை மாத பௌர்ணமி நாளன்று சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்படுவதாக ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் தேவராஜ்... மேலும் பார்க்க

சென்னையில் தொடர் கனமழை: சாலைகளில் தேங்கும் தண்ணீரால் வாகன ஓட்டிகள் அவதி

சென்னை: சென்னையில் புதன்கிழமை அதிகாலை முதல் பெய்து வரும் கனமழையால் தாழ்வான பகுதிகள் மற்றும் சேதமடைந்த சாலைகளில் தண்ணீா் தேங்கியுள்ளதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பெரும் அவதிக்குள்ளாகினா். மக்களின்... மேலும் பார்க்க

சிரியாவின் முன்னாள் அதிபர் கல்லறைக்கு தீவைப்பு!

சிரியாவில் முன்னாள் அதிபர் கல்லறைக்கு கிளர்ச்சிப்படையினர் தீவைப்பு!கர்தஹா: சிரியா நாட்டின் முன்னாள் அதிபரும், தற்போது தப்பியோடிய அதிபர் பஷார் அல் - அஸாத்தின் தந்தையுமான ஹஃபேஸ் அல்-அஸாத்தின் கல்லறை, கி... மேலும் பார்க்க

கனமழை: அரையாண்டுத் தேர்வு ஒத்திவைப்பு

கனமழை காரணமாக தமிழகத்தில் 21 பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரையாண்டுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதேபோன்று வேலூரில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட... மேலும் பார்க்க