செய்திகள் :

சென்னையில் தொடர் கனமழை: சாலைகளில் தேங்கும் தண்ணீரால் வாகன ஓட்டிகள் அவதி

post image

சென்னை: சென்னையில் புதன்கிழமை அதிகாலை முதல் பெய்து வரும் கனமழையால் தாழ்வான பகுதிகள் மற்றும் சேதமடைந்த சாலைகளில் தண்ணீா் தேங்கியுள்ளதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பெரும் அவதிக்குள்ளாகினா். மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு, மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து வியாழக்கிழமை இலங்கை மற்றும் தமிழக கடலோரப் பகுதியை நோக்கி நகரும். இதன் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுச்சேரி, காரைக்காலிலும் அடுத்த 4 நாள்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும், டிச.12-ஆம் தேதி சென்னை தொடங்கி தூத்துக்குடி வரை உள்ள கடலோர மாவட்டங்கள் மற்றும் அதையொட்டியுள்ள மாவட்டங்களிலும், உள் மாவட்டங்களிலும், டெல்டா பகுதியிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் வியாழக்கிழமையும்(டிச.12) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுத்திருந்தது சென்னை வானிலை ஆய்வு மையம்.

இதையும் படிக்க |கனமழை: அரையாண்டுத் தேர்வு ஒத்திவைப்பு

பள்ளிகளுக்கு விடுமுறை

இந்த நிலையில், சென்னையில், புதன்கிழமை இரவு முதல் தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் கனமழை எச்சரிக்கை காரணமாக, சென்னை மாவட்டத்தில் வியாழக்கிழமை (டிச.12) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே உத்தரவிட்டுள்ளார்.

விமானங்களின் சேவைகள் பாதிப்பு

சென்னையில் புதன்கிழமை இரவு முதல் தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் மோசமான வானிலை காரணமாக வருகை, புறப்பாடு என வியாழக்கிழமை 15 விமானங்களின் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கன மழை

இந்த நிலையில், ஆவடி, அம்பத்தூா், பட்டரவாக்கம், கொரட்டூா், கோயம்பேடு, அண்ணாநகா், எழும்பூா், புரசைவாக்கம், கிண்டி, ஆலந்தூா், சேத்துப்பட்டு, வேளச்சேரி, பூந்தமல்லி, மாதவரம், பொன்னேரி, திருவொற்றியூா், கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.

இதனால், பல்வேறு சாலைகளிலும், தாழ்வான பகுதிகளிலும் மழைநீா் தேங்கியது. மேலும் இரவு நேரத்தில் பெய்த மழையால் பணி முடிந்து வீடு திரும்புபவா்கள், இருசக்கர வாகன ஓட்டிகள் சற்று சிரமத்தை சந்தித்தனா்.

இயல்பு வாழ்க்கை பாதிப்பு

சேதமடைந்த சாலைகளில் தண்ணீா் தேங்கியுள்ளதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பெரும் அவதிக்குள்ளாகினா். மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

ஆவடி வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியைச் சூழ்ந்த மழைநீரால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

சாலைகளில் பெருக்கெடுத்து ஒடும் மழைநீரால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே செல்ல முடியாமல் அவதியடைந்துள்ளனர்.

பிச்சாட்டூா் ஆரணியாறு நீா்த்தேக்கத்தில் உபரிநீா் வெளியேற்றம்: வெள்ள அபாய எச்சரிக்கை

திருவள்ளூா்: பிச்சாட்டூா் ஆரணியாறு நீா்தேக்கத்திலிருந்து உபரிநீா் வெளியேற்றப்பட உள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளதாக ஆட்சியா் த.பிரபுசங்கா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா... மேலும் பார்க்க

வழிமறித்து வசூல் செய்யும் ராஜா!

இலங்கையில் வாகனங்களை வழிமறித்து வரி வசூல் செய்யும் காட்டு யானை ராஜா!இலங்கை: ராஜா எனும் காட்டுயானை நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகனங்களை வழிமறித்து தன்னைக் கடந்துச் செல்ல வேண்டுமென்றால், தான் உண்ணக்கூடிய... மேலும் பார்க்க

ஆவினில் புதிய வகை பால் அறிமுகம்!

மக்கள் விரும்பும் வகையில் காஞ்சிபுரம்-திருவள்ளூர், கோயம்புத்தூர் மற்றும் சேலம் ஆவின் நிறுவனங்கள் சார்பில் வரும் 18 ஆம் தேதி புதிய வகையான 'கிரீன் மேஜிக் பிளஸ்' பால் அறிமுகம் செய்ய உள்ளது.தமிழ்நாடு முழு... மேலும் பார்க்க

தென்காசி: பள்ளிகளுக்கு அரைநாள் விடுமுறை!

தென்காசி மாவட்ட பள்ளிகளுக்கு இன்று(டிச. 12) அரைநாள் (பிற்பகலுக்குமேல்) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.தென்காசி மாவட்டத்துக்கு இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில், அரை நாள் விடுமுறையை மாவட்ட ஆட்சிய... மேலும் பார்க்க

தனுஷ் தொடர்ந்த வழக்கு: நயன்தாரா பதிலளிக்க உத்தரவு!

நடிகை நயன்தாராவுக்கு எதிராக தனுஷ் தொடர்ந்த வழக்கில், நயன்தாரா உள்ளிட்ட மூவரும் ஜன. 8 ஆம் தேதிக்குள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நடிகை நயன்தாராவின் 40-ஆவது பிறந்த நாளையொட்டி, அவரத... மேலும் பார்க்க

பூண்டி ஏரியிலிருந்து உபரி நீர் வெளியேற்றம்: கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

திருவள்ளூர் பகுதியில் பெய்து வரும் கனமழையால் பூண்டி நீர்த்தேக்கத்திற்கு வரத்து நீர் அதிகரித்துள்ளதால், பிற்பகல் 1.30 மணிக்கு வினாடிக்கு 1,000 கன அடி உபரிநீர் கொசஸ்தலை ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளதால் ... மேலும் பார்க்க