FAMILY படம்: ``சீரியல்ல துணை நடிகையா இருக்கிற எனக்கு இந்த அங்கீகாரம் ரொம்பவே பெர...
Nostradamus 2025: `ரஷ்யா போர் நிறுத்தம், நோய் தொற்று, விண்கல்..' -அழிவின் தீர்கதரிசி கணித்தது என்ன?
2024 அதன் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. 2025 -க்கான ஆயத்தப்பணிகளைத் தொடங்கியிருப்போம். இந்த ஆண்டும் ‘அழிவின் தீர்க்கதரிசி’ என அழைக்கப்படும் நாஸ்ட்ராடமஸ் கூறிய ஆருடங்களை நெட்டிசன்கள் ஆராயத் தொடங்கிவிட்டனர்.
லண்டனில் ஏற்பட்ட பெரும் தீ விப்த்து, ஹிட்லரின் அதிகாரம், 9/11 தாக்குதல், கோவிட்-19 தொற்று, ஜப்பான் பூகம்பம் என பல அழிவுகளை நாஸ்ட்ராடமஸ் 16ம் நூற்றாண்டிலேயே கணித்ததாகக் கூறப்படுகிறது.
2025 ஆண்டில் நடக்க வாய்ப்பிருக்கும் நாஸ்ட்ராடமஸ் கணிப்புகள் என்னென்ன? பார்ப்போம்.
ரஷ்யா - உக்ரைன் போரின் முடிவு?
நாஸ்ட்ராடமஸ் கணிப்புகள் 2024-ல் கண்டம் முழுவதுக்குமான போர் நடக்கும் என்றும் 2025-ம் ஆண்டு நீண்ட நெடிய போருக்கு முடிவு எட்டப்படும் என்றும் கூறுவதாக அவரது படிப்பினைகளை பின்பற்றுபவர்கள் தெரிவிக்கின்றனர்.
பிளேக் மற்றும் அதிக போர்கள்!
நாஸ்ட்ராடமஸ் இங்கிலாந்துக்கு அதிக போர்கள் மற்றும் எதிரிகளை விட மோசமான பிளேக் நோய் தொற்றால் மோசமான காலம் வருவதாக முன்னறிவித்திருக்கிறார்.
போர்கள் என்பது வெளிநாட்டுடன் அல்லாமல் உள்நாட்டு கலவரங்களாக கூட இருக்கலாம் எனக் கூறுகின்றனர். இங்கிலாந்தில் அரச குடும்பத்துக்கு எதிரான அலை எழுந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
கோவிட் 19 தொற்றை முன்னறிவித்ததால் பிளேக் வைரஸ் குறித்த கணிப்பை தீவிரமாக பார்க்கின்றனர். பண்டையகால தொற்றுநோய்கள் திரும்பலாம் என்கின்றனர்.
விண்கள் மோதல்
விண்கல் ஒன்று பூமியை தாக்கலாம் என்கிறது நாஸ்ட்ராடமஸ் கணிப்புகள். இதனை Harbinger of Fate அதாவது விதியின் முன்னோடி எனக் குறிப்பிடுகிறார் நாஸ்ட்ராடமஸ்.
அறிவியல் பூர்வமாக சில விண்கல்கள் பூமியை கடந்து சென்றாலும் அடுத்த ஆண்டே எதுவும் பூமியை நேரடியாக தாக்குவதற்கான வாய்பிருப்பதாக அறிவியலாளர்கள் இதுவரை தெரிவிக்கவில்லை.
பிரேசிலில் இயற்கை பேரிடர்கள்!
வெறுமையான மலைகளின் பாதையில் புதிய நகரத்துக்கு அருகில் இருக்கிறது 'உலகின் தோட்டம்': அது கைப்பற்றப்பட்டு தண்ணீரில் மூழ்கும், கந்தகத்தால் விஷமேறிய தண்ணீரை குடிக்கும் நிலை ஏற்படும்" என நாஸ்ட்ராடமஸ் எழுதியிருக்கிறார்.
கார்டன் ஆஃப் வேர்ல்ட், உலகின் தோட்டம் என பிரேசில் குறிக்கப்படுவதாக தெரிவிக்கின்றனர். அங்கு பெருவெள்ளம் ஏற்பட்டு எரிமலை வெடிப்பு நடக்கலாம் என்கின்றனர்.
2024ம் ஆண்டு மன்னர் சார்லஸ் பதவியை துறப்பார், சீனாவுடன் போர் ஏற்படும், போப் மாற்றப்படுவார் என முன்வைக்கப்பட்ட கணிப்புகளில் பலவும் அரங்கேறவில்லை. எனினும் காலநிலை மாற்றம், வறட்சி குறித்த சில கணிப்புகள் நடந்துள்ளது என்கின்றனர்.