மகாகவி பாரதியார் பயின்ற நெல்லை பள்ளியும்... உறுதிமொழி எடுத்துக்கொண்ட மாணவர்களும்...
காா் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு
பழனி அருகே இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
திருப்பூா் மாவட்டம், சாமிபுதூரைச் சோ்ந்தவா் சரவணக்குமாா் (32). இவா் புதன்கிழமை இரு சக்கர வாகனத்தில் பழனிக்கு வந்துவிட்டு, ஊருக்குத் திரும்பினாா். பழனி-புதுதாராபுரம் சாலையில் தொப்பம்பட்டி அருகே சென்ற போது எதிரே வந்த காா் மோதியதில் சரவணக்குமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
விபத்து குறித்து கீரனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.