பெரம்பலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
பெரம்பலூர்: தொடர் மழை காரணமாக பெரம்பலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் வியாழக்கிழமை (டிச.12) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் உத்தரவிட்டுள்ளார்.
இலங்கை கடலோரப் பகுதிகளையொட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு, மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து வியாழக்கிழமை இலங்கை மற்றும் தமிழக கடலோரப் பகுதியை நோக்கி நகரும்.
இதையும் படிக்க |கனமழை: தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?
இதன் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுச்சேரி, காரைக்காலிலும் அடுத்த 4 நாள்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், பெரம்பலூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் வியாழக்கிழமை (டிச.12) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் உத்தரவிட்டுள்ளார்.