பூண்டி ஏரியிலிருந்து உபரி நீர் வெளியேற்றம்: கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்...
CAG Report: 'ஏகப்பட்ட காலி பணியிடங்கள்' - தமிழ்நாடு சுகாதாரத்துறை குறித்து ரிப்போர்ட்
2016 - 2022-ம் ஆண்டு, தமிழ்நாடு பொது சுகாதார கட்டமைப்பு மற்றும் சுகாதார சேவை துறை பராமரிப்பு பற்றிய இந்திய தலைமை தணிக்கையகம் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,
தமிழ்நாடு மாநில சுகாதார துறையில் குடும்ப நல அசிஸ்டன்ட் மற்றும் பயிற்சியாளர், பெண் சுகாதார ஆய்வாளர் (Women Health Visitor), மகப்பேறு குழந்தைகள் நல அலுவலர் உள்ளிட்ட பணிகளில் 75 சதவிகித காலிபணியிடங்கள் உள்ளன.
இரண்டாம் நிலை சுகாதார மையங்களில் தேவைக்கு குறைவாகவே மருத்துவ மற்றும் துணை மருத்துவ ஊழியர்கள் உள்ளனர். ஆரம்ப சுகாதார மையங்களில் டாக்டர் மற்றும் நர்ஸ் பணிகளுக்கு பெருமளவு காலி பணியிடங்கள் உள்ளது.
சில இடங்களில் மருந்து சப்ளை குறைவாக இருக்கிறது அல்லது இல்லவே இல்லாமலும் இருக்கின்றன.
சுகாதார நிலையங்களில் நோயாளிகளுக்கு காத்திருப்பு அறை, ரெஜிஸ்ட்ரேஷன் கவுன்டர், குடிநீர், கழிப்பிடம் போன்றவை இல்லாததும், சமையல், மார்ச்சுரி போன்ற இடங்களில் உள்ள குளறுபாடிகளாலும் சுகாதார துறையின் தரம் அடிப்பட்டிருக்கிறது.
ஐ.சி.யூ மற்றும் ஆப்ரேஷன் தியேட்டர்களின் எண்ணிக்கையும் மாவட்ட தலைநகர்களில் பற்றாக்குறையாக இருக்கின்றன.
தேசிய சுகாதார கொள்கைப்படி, பட்ஜெட்டில் 8 சதவிகிதத்தை சுகாதாரத் துறைக்கு ஒதுக்க வேண்டும். ஆனால், தமிழ்நாடு 5 சதவிகிதம் மட்டுமே ஒதுக்குகிறது" என்று கூறப்பட்டுள்ளது.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...