Vaikom : "பெரியாருக்கு புகழ் மாலை; கருணாநிதி இல்லாததை எண்ணி வருந்துகிறேன்" - மு....
ரஜினிகாந்த் பிறந்தநாள்: விஜய், கமல் வாழ்த்து!
ரஜினிகாந்த் பிறந்தநாளையொட்டி விஜய், கமல் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
சூப்பர்ஸ்டார் ரஜிகாந்த் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு திரையுலகினர், பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், நடிகருமான விஜய், நடிகர் ரஜினிகாந்துக்கு தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்துப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “பேரன்பிற்கும் மரியாதைக்கும் உரிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். தாங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் நீடூழி வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.
நடிகர் கமல்ஹாசனும் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “அன்பு நண்பர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். மென்மேலும் பல வெற்றிகள் பெறுக; நலம் சூழ்க; மகிழ்ச்சி நிறைக; நீடு வாழ்க!” எனப் பதிவிட்டுள்ளார்.