பிச்சாட்டூா் ஆரணியாறு நீா்த்தேக்கத்தில் உபரிநீா் வெளியேற்றம்: வெள்ள அபாய எச்சரிக...
`உள்ளூரிலும் வெளியூரிலும் தோல்வி; அரசியலுக்கே தகுதி இல்லை’ - அண்ணாமலை குறித்து செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி செய்தியாளர் சந்திப்பு..!
கோவை தனியார் ஹோட்டலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “கோவை மாநகராட்சியில் சாலை பணிகளுக்காக ரூ.200 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
காந்திபுரம் பேருந்து நிலையத்தை புதுப்பிக்க ரூ.30 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சத்தி சாலையை அகலப்படுத்துவதற்காக ரூ. 54 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கவும் முதலமைச்சர் தயாராக இருக்கிறார்.” என்று கூறினார்.
அதானி சந்திப்பு..!
அப்போது, அதானி - திமுக தொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை முன்வைத்துள்ள புகார்கள் குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த செந்தில் பாலாஜி, “சிலருக்கு ஊரில் வேலை வெட்டி இல்லை. எனவே சில கருத்துகளை கூறி வருகிறார்கள்.
உள்ளூரில் நின்றாலும் தோல்வி, வெளியூரில் நின்றாலும் தோல்வி என தொடர் தோல்விகளை சந்தித்து வரக்கூடியவர்கள் தங்களின் இருப்பிடத்தைக் காட்டுவதற்காக அவதூறு கருத்துக்களை பரப்புகிறார்கள். அதைப்பற்றி கவலைப்படுவதற்கு அவசியம் இல்லை.
`அரசியலுக்கு தகுதி இல்லாதவர்கள்’
ஊடக வெளிச்சத்துக்காக சிலர் கருத்துக்களை பதிவு செய்கிறார்கள். உங்களுக்கும் வேலை இருக்கிறது. எங்களுக்கும் வேலை இருக்கிறது. அரசு நிர்வாகம் செம்மையாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அரசியல் நாகரீகமாக இருக்க வேண்டும்.
அரசியலில் இருக்கக்கூடியவர்கள் பக்குவப்பட்டவர்களாக இருக்க வேண்டும். கருத்துகளை பகிரும்போது யாரையும் பழிச்சொல் பேசி புண்படுத்தக் கூடாது. அரசியலுக்கு தகுதி இல்லாதவர்கள் தான் இது போன்ற வார்த்தைகளை பயன்படுத்துவார்கள்.” என்றார்.