பிச்சாட்டூா் ஆரணியாறு நீா்த்தேக்கத்தில் உபரிநீா் வெளியேற்றம்: வெள்ள அபாய எச்சரிக...
செல்வராகவன் - ஜி. வி. பிரகாஷ் கூட்டணியில் புதிய படம்!
இயக்குநர் செல்வராகவன்புதிய படம் குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது.
இயக்குநராக விமர்சகர்களிடம் பாராட்டுகளைப் பெற்ற செல்வராகவன் சில காலம் திரைப்படங்களை இயக்குவதிலிருந்து இடைவெளி எடுத்துக்கொண்டு திரைப்படங்களில் நடிகராக நடித்து வருகிறார். இறுதியாக, சொர்க்கவாசல் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்த நிலையில், இயக்குநராக இவர் இயக்கவுள்ள புதிய படத்தின் அறிவிப்பு நாளை (டிச. 13) மாலை 6.30 மணிக்கு வெளியாகிறது.
இதையும் படிக்க: சீதாவாக நடிக்க அசைவம் சாப்பிடவில்லையா? ஆவேசமான சாய் பல்லவி!
இப்படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் இசையமைக்கவுள்ளார். செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன படங்களில் இசையமைப்பாளராக பணியாற்றி இன்றும் ரசிகர்களை ஈர்க்கும் பின்னணி இசைகளை உருவாக்கிய ஜி. வி. பிரகாஷ் மீண்டும் செல்வராகவனுடன் இணைவது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இப்படத்தை பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.