Harry Brook : 'அறிமுகமான இரண்டே ஆண்டுகளில் உலகின் நம்பர் 1 வீரர்' - ஹாரி ப்ரூக் ...
சாத்தனூர் அணையில் 10,000 கனஅடி நீர் திறப்பு: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
கனமழை காரணமாக சாத்தனூர் அணையில் இருந்து 10,000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ள நிலையில், தென் பெண்ணை ஆற்றங்கரையோர மக்களுக்கு பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
நீர்பிடிப்புப் பகுதியில் பெரும் மழை பொழிவால் திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தது. அணையின் முழுக் கொள்ளவான 119 அடியில் 117.45 அடியை நெருங்கியது. தண்ணீர் வரத்தை முன்கூட்டியே கணித்து, அணையின் பாதுகாப்பு கருதி, அணைக்கு வரும் தண்ணீர், வினாடிக்கு 10,000 கன அடி தண்ணீர் தென் பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
இதையும் படிக்க |ரஜினி பிறந்த நாள்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!
இதனால் தென் பெண்ணை ஆற்றங்கரையோரங்களில் வசிக்கும் கொளமாஜனூர், திருவாதனூர், புதூர் செக்கடி, ராயண்டபுரம், அகரம்பள்ளிப்பட்டு, தொண்டமானூர் உள்ளிட்ட பல கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு பொதுப்பணித் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.