செய்திகள் :

PM Modi - kapoor family: ராஜ் கபூர் நினைவுகளை அவர் குடும்பத்தினருடன் பகிர்ந்த பிரதமர் மோடி!

post image

பாலிவுட்டில் 1935-ம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்பு கதாநாயகனாக உருவெடுத்து புகழ் பெற்ற நடிகரானார் ராஜ் கபூர். நடிகர், எடிட்டர், இயக்குநர், தயாரிப்பாளர் எனப் பல்வேறு முகங்கள் கொண்ட இவருக்கு 1988-ம் ஆண்டு இந்திய திரைத்துறையில் உயரிய விருதாக கருதப்படும் தாதா சாகேப் பால்கே விருது இந்திய அரசால் கொடுக்கப்பட்டது. இந்த நிலையில், ராஜ் கபூரின் நூற்றாண்டு விழா நாளை முதல் 15-ம் தேதி வரை நடைபெறுகிறது. பிரமாண்டமாக நடைபெறவுள்ள இந்த விழாவில் 14-ம் தேதி பிரதமர் மோடி இதில் கலந்துகொள்ள வேண்டும் என ராஜ் கபூரின் குடும்பத்தினர் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனர்.

கபூர் குடும்பத்துடன் மோடி

இந்த சந்திப்பில், ராஜ் கபூரின் மகள் ரீமா ஜெயின், மருமகள் நீது கபூர், பேரக்குழந்தைகள் - நடிகர்கள் கரிஷ்மா கபூர், கரீனா கபூர் அவரின் கணவர் சைஃப் அலிகான், ரன்பீர் கபூர் அவரின் மனைவி ஆலியா பட், ஆதார் ஜெயின், அர்மான் ஜெயின், ரித்திமா கபூர் சாஹ்னி, அர்மான் ஜெயின், நீது கபூர் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர். அப்போது பிரதமர் மோடி, `` சினிமா என்பது மென்மையான சக்தி (soft power). அதுப்பற்றி சமீபமாகதான் பேசுகிறோம். ஆனால், இந்த சொற்றொடர் கூட இல்லாத நேரத்தில், ராஜ் கபூர் இந்தியாவின் மென்மையான சக்தியை உலகம் முழுவதும் நிறுவினார். இது இந்தியாவுக்கு அவர் செய்த பெரிய சேவை.

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் மற்றும் துணைப் பிரதமர் எல்.கே. அத்வானி ஆகியோர் ஜனசங்க காலத்தில், டெல்லியில் தேர்தல் நடந்து, அதில் தோற்றுவிட்டார்கள். அப்போது இருவரும் 'தேர்தலில் தோற்றோம், இப்போது என்ன செய்யலாம்... ஒரு படம் பார்க்கலாமா?' என இருவரும் ஒரு திரைப்படத்தைப் பார்க்கச் சென்றனர், அது ராஜ் கபூரின் 'ஃபிர் சுபா ஹோகி' (ஒரு புதிய காலை). ஒரு சீனப் பயணத்தின் போது, ​​ராஜ் கபூரின் திரைப்படங்களின் பாடல்களை தொகுப்பாளர்கள் இசைத்தனர். நான் அதை மொபைலில் பதிவு செய்யும்படி எனது குழுவைக் கேட்டுக் கொண்டேன். அதை ரிஷி கபூருக்கும் அனுப்பினேன். அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்.

கபூர் குடும்பத்துடன் மோடி

ராஜ் கபூர் மற்றும் அவரது படங்களின் உலகளாவிய தாக்கத்தை காட்சி வடிவத்தில் பதிவு செய்ய வேண்டும். மத்திய ஆசிய மக்களின் வாழ்க்கையில் அவர் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினார். அதை நாம் மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். புதிய தலைமுறையையும் இதில் இணைக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த சந்திப்புக்குப் பிறகு நடிகர் ரன்பீர் கபூர், ``பிரதமருடன் நாங்கள் உரையாடும்போது, நிறைய தனிப்பட்ட கேள்விகளைக் கேட்டோம். அவர் எங்களுடன் மிகவும் நட்பாகப் பேசினார். பிரதமரை சந்தப்பதற்கு முன் மிகவும் பதட்டமாக இருந்தோம். ஆனால் அவர் மிகவும் நல்லவராகவும், எங்களுடன் யதார்த்தமாகவும் இருந்தார். அவருக்கு நன்றி" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

கபூர் குடும்பத்துடன் மோடி

நடிகை கரீனா கபூர் கான், "பிரதமர் மோடியின் அருகில் அமர்ந்து அவருடன் பேச வேண்டும் என்பது எனது கனவாக இருந்தது. அவரது ஆற்றல் மிகவும் நேர்மறையானது. உண்மையிலேயே அவர் ஒரு உலகளாவிய தலைவர்" எனக் குறிப்பிட்டிருக்கிறார். நடிகை ஆலியா பட், ``அவர் எங்களை வரவேற்ற விதம், ராஜ் கபூரைப் பற்றி அவர் பேசிய விதம், ராஜ் கபூரை உலகிற்குக் கற்பிக்க நாம் என்ன செய்ய முடியும் என்பது குறித்து அவர் நிறைய யோசனைகளையும் பரிந்துரைகளையும் வழங்கியது மிகவும் பிடித்திருந்தது" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Baby John : `இதற்கெல்லாம் காரணமே விஜய் அண்ணன்தான்!' - நெகிழும் அட்லீ

அட்லீ தயாரிப்பில் உருவாகியிருக்கிற பாலிவுட் திரைப்படம் `பேபி ஜான்'.விஜய் நடிப்பில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான `தெறி' திரைப்படத்தின் இந்தி ரீமேக்தான் இப்படம். வருண் தவான், கீர்த்தி சுரேஷ், வமிக்கா கேப... மேலும் பார்க்க

Baby John Trailer :`தெறி' இந்தி ரீமேக்; விஜய் கதாபாத்திரத்தில் வருண் தவான்; சல்மான் கான் கேமியோ!

வருண் தவான், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியிருக்கிற திரைப்படம் `பேபி ஜான்'2016-ம் ஆண்டு அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான `தெறி' திரைப்படத்தின் பாலிவுட் ரீமேக்தான் இந்த `பேபி ஜான்'. வருண் ... மேலும் பார்க்க

Sharukh - Salman - Aamir: கூட்டணி சேர விரும்பும் 3 கான்கள் - உருவாகும் புதிய படம்; பின்னணி என்ன?

பாலிவுட்டில் சல்மான் கான், ஷாருக் கான் மற்றும் ஆமீர் கான் மூன்று பேரும் சேர்ந்து ஒரே படத்தில் இதுவரை நடித்ததில்லை. ஷாருக் கான் மற்றும் சல்மான் கான் ஆகியோர் ஏற்கெனவே இணைந்து நடித்துள்ளனர்.புதிய படம் ஒன... மேலும் பார்க்க

Vikrant Massey: "நான் சினிமாவிலிருந்து ஓய்வு பெறவில்லை..." - விளக்கம் அளித்த 12th Fail நடிகர்

'12th fail' படத்தின் மூலம் பலரது கவனத்தை ஈர்த்தவர் பாலிவுட் நடிகர் விக்ராந்த் மாஸ்ஸி. 2016-ம் ஆண்டு வெளியான 'A Death in the Gunj' எனும் திரில்லர் திரைப்படத்தில், தன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய இவ... மேலும் பார்க்க

Chhatrapati Shivaji Maharaj: மராத்திய மன்னராக ரிஷப் ஷெட்டி - ரிலீஸ் எப்போது?

காந்தாரா படத்தின் மூலம் பான் இந்தியா ஸ்டாராக வளர்ந்த ரிஷப் ஷெட்டி, சத்ரபதி சிவாஜி மஹாராஜ் என்ற படத்தில் நடிக்க உள்ளார். இது மராத்திய மன்னர் சிவாஜியின் வாழ்க்கைக் கதையை அடிப்படையாகக் கொண்ட படமாக இருக்க... மேலும் பார்க்க

Vikrant Massey: ` அப்போ டி.வி; இப்போ சினிமா' - 12th Fail நடிகர் சினிமாவிலிருந்து விலகுவது ஏன்?

பெரும்பான்மையான நடிகர்கள் கரியரின் உச்சத்தில் இருக்கும்போது அதிலிருந்து ரிடையர்மென்ட் எடுத்துக் கொள்ளமாட்டார்கள்.பெரியளவிலான வாய்ப்புகள் இல்லாத சூழலிலும் உடல்நிலை ஒத்துழைக்காத சூழலிலும்தான் இத்தகைய ரி... மேலும் பார்க்க