Vaikom : "பெரியாருக்கு புகழ் மாலை; கருணாநிதி இல்லாததை எண்ணி வருந்துகிறேன்" - மு....
வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழா: முதல்வர் பங்கேற்பு!
வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழா கேரளத்தின் வைக்கத்தில் நடைபெற்றுவருகிறது.
வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழாவில் முதலவர் மு.க.ஸ்டாலினுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் அழைப்பு விடுத்திருந்தார்.
அதன்படி, வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். பெரியார் படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
ரஜினிகாந்த் பிறந்தநாள்: விஜய், கமல் வாழ்த்து!
வைக்கம் போராட்டத்தில் பெரியார் ஈ.வெ.ரா. பங்கேற்று நூறு ஆண்டுகள் நிறைவு பெற்றதை முன்னிட்டு, வைக்கம் நகரில் வியாழக்கிழமை நடைபெறவுள்ள விழாவில் தமிழக, கேரள முதல்வர்கள் பங்கேற்றனர்.
அங்குள்ள பெரியார் நினைவகம், நூலகம் ஆகியவற்றின் திறப்பு நிகழ்வில் கலந்துகொண்டு இரு மாநில முதல்வர்களும் நூலகத்தை திறந்து வைத்தனர்.
விவாகரத்தை அறிவித்தார் சீனு ராமசாமி!
இதில், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், கேரள தேவஸ்தான துறை அமைச்சர் வி.என்.வாசவன், இளைஞர் நலத் துறை அமைச்சர் சஜி செரியன் உள்பட பலர் பங்கேற்றுள்ளனர்.
முன்னதாக, இவ்விழாவில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை புறப்பட்டுச் சென்றார். கொச்சி விமான நிலையத்தை சென்றடைந்த அவருக்கு, கேரள மாநில திமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், கேரள அரசு சார்பிலும் வரவேற்பு மரியாதை அளிக்கப்பட்டது.