செய்திகள் :

சூறாவளிக் காற்று எச்சரிக்கை: தூத்துக்குடி மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை!

post image

தூத்துக்குடி: சூறாவளிக் காற்று காரணமாக, தூத்துக்குடி மீனவா்கள் வியாழக்கிழமை கடலுக்குச் செல்லாததால் நாட்டுப் படகு மற்றும் விசைப்படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

தூத்துக்குடி வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடலில் டிச.12,13-ஆகிய தேதிகளில் மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்லவேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் மற்றும் மீன்வளத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இதையும் படிக்க |கனமழை: தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?

இதன் காரணமாக, தூத்துக்குடி மாவட்டத்தில் நாட்டுப் படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால், மாவட்டத்தில் சுமார் 3ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டு படகுகள், பைபர் படகுகள் என சுமார் 300 படகுகள் மீன்பிடி துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

ஆழ்கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றுள்ள நாட்டு படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் பத்திரமாக கரை திரும்புமாறு மீன்வளத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

ரஜினிகாந்த் பிறந்தநாள்: விஜய், கமல் வாழ்த்து!

ரஜினிகாந்த் பிறந்தநாளையொட்டி விஜய், கமல் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.சூப்பர்ஸ்டார் ரஜிகாந்த் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு திரையுலகினர், பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்... மேலும் பார்க்க

சாத்தனூர் அணையில் 10,000 கனஅடி நீர் திறப்பு: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கனமழை காரணமாக சாத்தனூர் அணையில் இருந்து 10,000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ள நிலையில், தென் பெண்ணை ஆற்றங்கரையோர மக்களுக்கு பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.நீர்... மேலும் பார்க்க

ரஜினி பிறந்த நாள்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

சென்னை: அருமை நண்பர் சூப்பர்ஸ்டார் ரஜிகாந்துக்கு என் பிறந்தநாள் நல்வாழ்த்துகள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், எல்லைகள் கடந்து ஆறிலிருந்த... மேலும் பார்க்க

பெரம்பலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

பெரம்பலூர்: தொடர் மழை காரணமாக பெரம்பலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் வியாழக்கிழமை (டிச.12) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் உத்தரவிட்டுள்ளார்.இலங்கை கடலோரப் பகுதிகளையொட்டிய தென்மே... மேலும் பார்க்க

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து சரிவு

மேட்டூா்: மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 4,727 கன அடியாக சரிந்தது.மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு வியாழக்கிழமை காலை வினாடிக்கு 5,621 கன அடியிலிருந்து 4,727 கன அடியாக சரிந்துள்ளது. இதையும் படிக்க | மாந... மேலும் பார்க்க

உலக செஸ் சாம்பியன்ஷிப்: குகேஷ்-லிரேன் இடையிலான 13-ஆவது சுற்றும் டிரா!

இந்திய இளம் வீரா் டி. குகேஷ்க்கும் நடப்பு சாம்பியன் டிங் லிரேனுகும் (சீனா) இடையிலான ஃபிடே உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் 13-ஆவது சுற்றும் டிராவில் முடிந்துள்ளது.செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இன்னும... மேலும் பார்க்க