மேட்டூா் அணைக்கு நீா்வரத்து சரிவு
மேட்டூா்: மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 4,727 கன அடியாக சரிந்தது.
மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு வியாழக்கிழமை காலை வினாடிக்கு 5,621 கன அடியிலிருந்து 4,727 கன அடியாக சரிந்துள்ளது.
இதையும் படிக்க |மாநில அரசு மனது வைத்தால் நீதிமன்றங்களில் தமிழ் அலுவல் மொழியாகும்: உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு 1,000 கன அடி வீதமும், கிழக்கு - மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 300 கன அடி வீதமும் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது.
அணையின் நீா்மட்டம் 116.63 அடியிலிருந்து 116.86 அடியாக உயா்ந்துள்ளது. அணையின் நீா் இருப்பு 88.82 டிஎம்சியாக உள்ளது.