HBD Rajini: `1991-ல் வெளியான `தளபதி' ; `அட... வெரிகுட்’ ஆனந்த விகடன் விமர்சனத்த...
உலகளவில் செயலிழந்த ChatGPT: சிக்கலை சந்தித்த பயனர்கள்; OpenAI கொடுத்த விளக்கம் என்ன?
மைக்ரோசாப்ட் ஆதரவு பெற்ற OpenAI-ன் பிரபலமான சாட்போட் ChatGPT. உலகை சுருக்கி கைக்குள் அடக்கும் இதன் செயல்பாடுகளால், உலகளவில் பெரும் வரவேற்பை பெற்றுவருகிறது. இதற்கு போட்டியான தொழில்நுட்பங்களும் வந்துகொண்டிருக்கின்றன. இந்த நிலையில், நேற்று ChatGPT உலகளாவிய செயலிழப்பைச் சந்தித்திருக்கிறது. அதனால், ChatGPT பயனர்கள் பாதிப்படைந்திருக்கின்றனர்.
இந்த செயலிழப்பு ChatGPTயை மட்டுமல்லாமல், OpenAI-ன் API, Sora video generator தளங்களையும் பாதித்திருக்கிறது. 'பிரீமியம்' சேவைக்கு சந்தா மூலம் பணம் செலுத்தும் பயனர்கள், API தளத்தையும், செயற்கை நுண்ணறிவு (AI) திட்டங்களையும் நம்பியிருக்கும் வணிகங்கள் உள்பட பல பயனர்கள் OpenAI சேவை இடையூறுகள் தொடர்பாகப் புகாரளித்துள்ளனர்.
இது தொடர்பாக OpenAI தன் எக்ஸ் பக்கத்தில், ``நாங்கள் தற்போது சில செயலிழப்பைச் சந்தித்து வருகிறோம். சிக்கலைக் கண்டறிந்து, அதைச் சரிசெய்வதற்குப் பணிபுரிந்து வருகிறோம். தற்போது ஏற்பட்டிருக்கும் இந்த இடையூறுக்கு மன்னிக்கவும். சேவையை இயல்பு நிலைக்குத் திரும்பப் பணியைத் தொடர்கிறோம்." எனப் பதிவிட்டிருக்கிறது.
இதே போன்று கடந்த நவம்பர் 8 அன்று, ChatGPT உலகளவில் 19,000 பயனர்களுக்கு 30 நிமிடங்களுக்கு செயல்படவில்லை என்பதும் ஜூன் மாதம் 5 மணி நேரத்திற்கும் மேலாக அது நீடித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.