பும்ராவுக்கு எதிராக ரன்கள் குவிப்பது நல்ல அனுபவம்: ஆஸி. இளம் வீரர்
ChatGPT down ஆனது ஏன்? அதனிடமே கேள்வி கேட்டதற்கு OpenAI சொன்ன பதில்!
ChatGPT செயலிழப்பு
உலகளவில் OpenAI-ன் பிரபலமான சாட்போட் ChatGPT செயலிழப்புப் புகார்களை எதிர்க்கொண்டிருக்கிறது. ChatGPT, API, Sora video generator உள்ளிட்ட OpenAI தளங்கள் பலருக்கு முற்றிலுமாக செயல்படாமலும், சிலருக்கு அதன் செயல்பாட்டின் வேகத்திலும் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. அதனால், இந்த தொழில்நுட்பத்தை அடிப்படையாக வைத்து இயங்கிய நிறுவனங்கள் பெரும் சவாலை எதிர்க்கொண்டன. இந்த செயலிழப்புக்கான காரணத்தை கண்டறிந்து, மீண்டும் ChatGPT-ஐ இயல்புநிலைக்குக் கொண்டுவர பணியாற்றி வருவதாக OpenAI தெரிவித்திருக்கிறது.
ChatGPT down ஆனது ஏன்?
இது தொடர்பாக ஏன் ChatGPT down என்று அதனிடமே கேட்டபோது, ``டிசம்பர் 12, 2024 அன்று, ChatGPT, காலை 7:10 மணியளவில் தொடங்கி உலகளாவிய செயலிழப்பைச் சந்தித்தது. சென்னை, தமிழ்நாடு உள்பட உலகெங்கிலும் உள்ள பயனர்கள் இதனால் பாதித்திருக்கின்றனர். OpenAl இந்த சிக்கல் இருப்பதை ஏற்றுக்கொண்டது. சிக்கலைக் கண்டறிந்து, அதைச் சரிசெய்வதற்குப் பணிபுரிந்து வருகிறது.
குறிப்பாக ChatGPT, அதன் API மெதுவான உள்நுழைவுகள், தவறான தகவல்கள், செய்திகளால் பெரும் சிரமங்களை எதிர்கொண்டதாக பயனர்கள் தெரிவித்தனர். தற்போது சேவைகள் படிப்படியாக இயல்பு நிலைக்குத் திரும்புகின்றன. சமீபத்திய புதுப்பிப்புகளுக்கு, OpenAl-ன் நிலைப் பக்கத்தை நீங்கள் கண்காணிக்கலாம். நீங்கள் தொடர்ந்து சிக்கல்களைச் சந்தித்தால், OpenAl-ன் அதிகாரப்பூர்வ பக்கங்களில் தெரியப்படுத்தவும்." எனத் தெரிவித்திருக்கிறது.