செய்திகள் :

CAG Report : `தமிழ்நாடு பசுமை வீடு திட்டம்; பயனாளிகள், தகடு... அனைத்திலும் குளறுபடி'

post image

2011-ம் ஆண்டு தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட சூரிய ஒளியில் இயங்கும் பசுமை வீடு திட்டத்தை கடுமையாக விமர்சித்துள்ளது இந்திய தலைமை தணிக்கையகம் அறிக்கை.

அந்த CAG அறிக்கையில்,

"இந்த திட்டம் மூலம் பயன்பெற்ற பெரும்பாலானவர்கள், இந்த திட்டத்தில் பயன்பெற தகுதி இல்லாதவர்கள் தான். மேலும், இந்தத் திட்டத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் SPVHL சிஸ்டமும் தரமற்றது ஆகும்.

இந்தத் திட்டத்தின் விதிமுறைப்படி, ஒரு ஊரின் பஞ்சாயத்திற்குள் இருக்கும் தகுதியானவர் கிராம சபை ஒப்புதலுடன் பசுமை வீடு திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு சோலார் மின் தகடு திட்டத்தில் மோசடி...

ஆனால், இந்தத் திட்டத்தில் பயன்பெற தேர்ந்தெடுக்கப்பட்ட 57 கிராமங்களில் 27 கிராமங்களுக்கு கிராம சபையால் அல்லாமல் தொகுதி வளர்ச்சி அலுவலரால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

கோவை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் டெண்டர் எடுத்தவர்களிடம் சரியான ஆவணங்கள் பெறப்படவில்லை. திண்டுக்கல், திருச்சி மாவட்டங்களிலும் SPVHL சிஸ்டத்தில் குளறுபடிகள் நடந்துள்ளது.

மேலும், இந்த திட்டத்தில் SPVHL சிஸ்டத்தை பராமரிக்க சர்வீஸ் சென்டர்களும், எப்படி பராமரிக்க வேண்டும் என்பதை கற்றுகொடுக்க டிரைனிங்கும் நடத்த வேண்டும். ஆனால், சர்வீஸ் சென்டருக்கானவோ அல்லது டிரைனிங் நடந்ததற்கோ எந்தவொரு அறிகுறியுமே இல்லை.

ஆக, சூரிய ஒளியில் இயங்கும் பசுமை வீடு திட்டத்தில் நடந்துள்ள மோசடிகளை அரசு விசாரிக்க வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/MaperumSabaithanil

புதுச்சேரியில் மீண்டும் கனமழை எச்சரிக்கை... பொதுமக்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தல்!

புதுச்சேரியில் 2 நாள்களுக்கு கனமழை..தெற்கு வங்கக் கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் நவம்பர் 30-ம் தேதி புதுச்சேரி அருகே கரையை கடந்தது. அதனால் புதுச்சேரியில் 52 செ.மீ அளவுக்கு மழை பெய்ததால், நகரம் மற்றும் க... மேலும் பார்க்க

`புதுச்சேரி அரசின் ஹோட்டலை விலைக்கு கேட்டாரா விக்னேஷ் சிவன்?’ - அமைச்சர் சொல்வதென்ன?

விக்னேஷ் சிவன்புதுச்சேரியில்புதுச்சேரி சுற்றுலா மாநிலம் என்பதால், சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் அம்மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும்... மேலும் பார்க்க

அம்பேத்கர் சிலை அருகே அரசியலமைப்பு சட்டம் கிழிப்பு: மகாராஷ்டிராவில் வன்முறை... பந்த்!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பர்பானியில் அம்பேத்கர் சிலை அருகில் நின்று கொண்டு, சோபன் பவார் என்பவர் அரசியலமைப்புச் சட்டத்தை கிழித்ததாக தெரிகிறது. ரயில் நிலையம் அருகில் நடந்த இச்சம்பவம் குறித்து நகர் ம... மேலும் பார்க்க