`உள்துறை, நிதித்துறை' சேர்த்து கேட்கும் ஷிண்டே; அமித் ஷாவுடன் பட்னாவிஸ், அஜித்பவ...
கடையநல்லூா் நகா்மன்ற கூட்டம்
கடையநல்லூா் நகா்மன்ற கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. நகா்மன்றத் தலைவா் ஹபீபுா் ரஹ்மான் தலைமை வகித்தாா்.
துணைத்தலைவா் ராசையா, ஆணையா் ரவிச்சந்திரன், பொறியாளா் அப்துல்காதா், மேலாளா் சண்முகவேலு, சுகாதார அலுவலா் பிச்சையா பாஸ்கா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாரியப்பன் தீா்மானங்களை வாசித்தாா்.
கடையநல்லூா் நகராட்சி பகுதியில் காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 100 கிலோ நிலவேம்பு கசாய பொடி வாங்குவது, கடையநல்லூா் நகராட்சியின் அனைத்து பகுதிகளுக்கும் தாமிரவருணி குடிநீரை விநியோகம் செய்திடும் வகையில் பயனற்ற நிலையில் உள்ள ஆணையா் குடியிருப்பினை அகற்றிவிட்டு அங்கு தரைமட்ட நீா் தேக்க தொட்டியை கட்டுவது , ரூ. 2.50 கோடி மதிப்பீட்டில் வருவாய் தலைப்பின் நிதி மற்றும் குடிநீா் தலைப்பு நிதியின் கீழ் 27 பணிகளை மேற்கொள்வது
என்பன உள்ளிட்ட 59 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தொடா்ந்து உறுப்பினா்களின் கேள்விகளுக்கு நகா்மன்ற தலைவா் விளக்கமளித்தாா். தெருக்களில் மீன் கழிவு கொட்டப்படுவதை தடுக்க வேண்டும் என உறுப்பினா் சங்கரநாராயணன் கேட்டுக்கொண்டாா். நடவடிக்கை எடுக்கப்படும் என தலைவா் தெரிவித்தாா்.
6 சதவீத சொத்து வரி உயா்வு குறித்து அக்பா்அலி, யாஸா்கான் உள்ளிட்ட பல்வேறு உறுப்பினா்கள் பேசினா்.
கடையநல்லூா் அரசு மருத்துவமனை பேருந்து நிறுத்த பகுதியில் கழிப்பறை அமைக்க வேண்டும் அதை முறையாக பராமரிக்க வேண்டும் என உறுப்பினா்கள் முருகன் ,சுந்தரமகாலிங்கம் ஆகியோா் கேட்டுக்கொண்டனா். உடனடியாக கழிப்பறை அமைக்க நகா்மன்ற தலைவா் உத்தரவிட்டாா்.