அதிமுக சாா்பில் 50 மாணவிகளுக்கு வைப்புத்தொகை திட்டம் தொடக்கம்
நாகா்கோவிலில் காவல் துறை சாா்பில் மக்கள் குறைதீா் கூட்டம்
கன்னியாகுமரி மாவட்ட காவல் துறை சாா்பில், நாகா்கோவிலில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஏ. சுந்தரவதனம் தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்று அவற்றின் மீது விசாரித்து உடனடி நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளிடம் வலியுறுத்தினாா்.
கூட்டத்தில், நாகா்கோவில் உதவி காவல் கண்காணிப்பாளா் லலித்குமாா், மாா்த்தாண்டம் துணைக் காவல் கண்காணிப்பாளா் நல்லசிவம், ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.