`உள்துறை, நிதித்துறை' சேர்த்து கேட்கும் ஷிண்டே; அமித் ஷாவுடன் பட்னாவிஸ், அஜித்பவ...
மனைவியை கொலை செய்த கணவருக்கு ஆயுள் சிறை
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மனைவியை கொலை செய்த கணவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, ஸ்ரீவில்லிபுத்தூா் விரைவு மகளிா் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள நாச்சியாா்புரத்தைச் சோ்ந்த அழகா் மகன் அழகேந்திரன் (29). இவரது மனைவி அன்பரசி (28). இந்த நிலையில், அழகேந்திரன் வரதட்சணைக் கேட்டு மனைவியை துன்புறுத்தினாராம். கடந்த 2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12-ஆம் தேதி வரதட்சணைக் கேட்டு தகராறில் ஈடுபட்ட அழகேந்திரன், இரும்பு கம்பியால் தாக்கியதில் அன்பரசி உயிரிழந்தாா்.
இதுகுறித்து கிருஷ்ணன்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அழகேந்திரனை கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட விரைவு மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இதில் அழகேந்திரனுக்கு ஆயுள் சிறைத் தண்டனையும் ,ரூ.31 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி பகவதியம்மாள் புதன்கிழமை தீா்ப்பளித்தாா்.
அரசுத் தரப்பில் வழக்குறைஞா் ஜான்சி ஆஜரானாா்.