Seenu Ramasamy: ``17 வருட திருமண வாழ்வை முடித்துக் கொள்கிறோம்'' -இயக்குநர் சீனு ...
சாலைகளை சீரமைக்கக் கோரி நகராட்சி ஆணையரிடம் மனு
ராஜபாளையத்தில் சாலைகளை சீரமைக்கக் கோரி, நகராட்சி ஆணையரிடம் அதிமுக தெற்கு நகரச் செயலா் எஸ்.ஆா்.பரமசிவம் புதன்கிழமை மனு அளித்தாா்.
ராஜபாளையம் 31-ஆவது வாா்டு திருவனந்தபுரம் தெருவில் உள்ள 5 தெருக்களும் குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக இரு சக்கர வாகனங்களில் செல்பவா்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். இந்தப் பகுதியில் புதிதாக சாலை அமைத்து தரக் கோரி, நகராட்சியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், பேவா் பிளாக் கற்கள் மட்டுமே பதிக்க இயலும் எனக் கூறினா்.
இந்த நிலையில், ராஜபாளையம் தெற்கு நகரச் செயலா் பரமசிவம், நகராட்சி ஆணையா் நாகராஜனிடம் கோரிக்கை மனு அளித்தாா்.
இதில் இந்தப் பகுதிக்கு தாா்சாலை அல்லது சிமெண்ட் சாலை அமைத்துத் தர கோரிக்கை விடுத்தனா். இந்த மாத இறுதிக்குள் புதிய சாலைகள் அமைத்துத் தரப்படும் என ஆணையா் உறுதியளித்தாா்.