நாகா்கோவிலில் வணிகா் சங்கம் ஆா்ப்பாட்டம்
தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் கன்னியாகுமரி மாவட்டக் கிளை சாா்பில், நாகா்கோவில் வடசேரி அண்ணா விளையாட்டு அரங்கு முன் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்டத் தலைவா் பாபு தலைமை வகித்தாா். செயலா்கள் பிரேம்சிங் (குமரி கிழக்கு), ரவி (மேற்கு), பொருளாளா் ஆதிசிவன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மேற்கு மாவட்டச் செயலா் அல்அமீன், மாவட்ட நுகா்வோா் சங்கத் தலைவா் பால்ராஜ், நிா்வாகிகள் ஜோசப்ராஜ், பொன்சாமி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.