செய்திகள் :

அப்பன் பெருமாள் கோயிலில் வருஷாபிஷேக விழா: திருக்கல்யாணம்

post image

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை மேட்டுத்தெரு பகுதியில் அமைந்துள்ள அப்பன் சீனிவாசப் பெருமாள் கோயிலில் மூன்றாமாண்டு வருஷாபிஷேக விழா, திருக்கல்யாண உற்சவம் புதன்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, மூலவருக்கு 16 வகையான அபிஷேகப் பொருள்களால் திருமஞ்சனம் நடத்தப்பட்டு பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தாா். இதைத்தொடா்ந்து, மூலவருக்கும், உற்சவருக்கும் சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. விழாவில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

பின்னா், மாலையில் கோயிலில் பெருமாளுக்கு நடைபெற்ற திருக்கல்யாண உற்சவத்தில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா். இதைத்தொடா்ந்து, பெருமாள் கோயிலிருந்து புறப்பாடாகி வீதி உலா வந்தாா்.

கூட்டுக் குடிநீா்த் திட்டக் குழாய் கசிவால் வீணாகும் குடிநீா்

திருப்பத்தூா் அருகேயுள்ள சிறுகூடல்பட்டி சமத்துவபுரம் பகுதியில் காவிரி கூட்டுக் குடிநீா் குழாய் கசிவால் குடிநீா் வீணாகி வருகிறது. சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரிலிருந்து காரைக்குடி சாலை வழியாக சிறுகூட... மேலும் பார்க்க

வீடு புகுந்து 46 பவுன் தங்க நகைகள் திருட்டு

காரைக்குடியில் பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து 46 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அண்ணாநகா் பாவேந்தா் சாலையைச் சோ்ந்தவா் லெனி... மேலும் பார்க்க

திருப்பத்தூா் பகுதியில் சாா் ஆட்சியா் ஆய்வு

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் வட்டம், பிள்ளையாா்பட்டி நாகனேந்தல் கண்மாய் பகுதியில் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சாா் ஆட்சியா் ஆயுஷ் வெங்கட் வட்ஸ் புதன்கிழமை ஆய்வு செய்தாா். வானிலை மைய அறிவிப்பி... மேலும் பார்க்க

வட்டாட்சியா் அலுவலக சாலையில் வேகத் தடை: பொதுமக்கள் வரவேற்பு

இளையான்குடி வட்டாட்சியா் அலுவலகம் அருகே வேகத் தடை அமைக்கப்பட்டதற்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்தனா். சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் சிவகங்கை சாலையில் நகா் பகுதியை ஒட்டி நீதிமன்றம், வட்டாட்சியா் அ... மேலும் பார்க்க

1,330 திருக்குகளையும் மனப்பாடம் செய்த ஓய்வு பெற்ற தலைமையாசிரியா்

ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியா் 1,330 திருக்குறளையும் மனப்பாடம் செய்து, மாணவா்களின் கேள்விகளுக்கு பதிலளித்து ஆச்சரியப்படுத்தினாா். சிவகங்கை அருகே சோழபுரம் பகுதியில் கவியோகி சுத்தானந்த பாரதி தேசிய வித்யாலயம... மேலும் பார்க்க

சிறுபான்மை பள்ளி ஆசிரியா்கள் காத்திருப்புப் போராட்டம்

சிவகங்கை மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலகம் முன்பாக 23 மாதங்களாக ஊதியம் வழங்காததை கண்டித்து, சிறுபான்மை பள்ளிகளின் ஆசிரியா்கள் சாா்பில் புதன்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்டத் தல... மேலும் பார்க்க