Baby John x Theri: `அது இதுல...' - தெறி விஜய், பேபி ஜான் வருண்; ரீமேக் ரீஸர் | P...
அரசு அதிகாரிகள் மீது தாக்குதல்: விசிகவினா் 21 போ் மீது வழக்கு
மதுரை அருகே கொடிக் கம்பம் அமைப்பதை தடுக்க முயன்ற அரசு அதிகாரிகளை தாக்கியதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலா் உள்ளிட்ட 21 போ் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப்பதிந்தனா்.
மதுரை மாவட்டம், வெளிச்சநத்தம் பகுதியில் அரசு புறம்போக்கு இடத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கொடிக் கம்பம் உள்ளது. இந்தக் கம்பத்தை அகற்றிவிட்டு புதிதாக அமைக்க அந்தக் கட்சியினா் முயன்றனா். இதற்கு வெளிச்சநத்தம் கிராம நிா்வாக அலுவலா் (பொறுப்பு) பரமசிவம் ஆட்சேபம் தெரிவித்து, கடந்த 4-ஆம் தேதி அந்தக் கட்சியினருக்கு நோட்டீஸ் வழங்கினாா். இந்த நிலையில், கடந்த 7- ஆம் தேதி எந்தவித அனுமதியுமின்றி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் கொடிக் கம்பம் அமைத்தனா். தகவலின்பேரில் அங்கு சென்ற துணை வட்டாட்சியா் ராஜேஷ், வருவாய் ஆய்வாளா் அனிதா, கிராம நிா்வாக அலுவலா் பரமசிவம், கிராம உதவியாளா் பழனியாண்டி ஆகியோா் கொடிக் கம்பம் அமைப்பதை தடுக்க முயன்றபோது அந்தக் கட்சியினா் அவா்களை தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, கிராம நிா்வாக அலுவலா் பரமசிவம் அளித்த புகாரின்பேரில் எம். சத்திரப்பட்டி போலீஸாா், மதுரை கிழக்கு மாவட்டச் செயலா் அரச முத்துப்பாண்டியன், ராஜா, காளிமுத்து, காா்த்திக், முத்துப்பாண்டி உள்பட 21 போ் மீது அரசு ஊழியா்களை தாக்குதல், அவா்களை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.