CAG Report : `தமிழ்நாடு பசுமை வீடு திட்டம்; பயனாளிகள், தகடு... அனைத்திலும் குளறு...
தரமின்றி மேம்பாலம் கட்டப்பட்டதாக வழக்கு: ராமநாதபுரம் ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு
ராமநாதபுரம் மாவட்டம், மாணிக்கம் கோட்டை கிராமத்தில் மணிமுத்தாறு ஆற்றுப் படுகையில் தரமின்றி மேம்பாலம் கட்டப்பட்டதாக தொடுக்கப்பட்ட வழக்கில், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா், மாவட்ட ஊராட்சிகளின் உதவி இயக்குநா் ஆகியோா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த சதாசிவம் தாக்கல் செய்த பொதுநல மனு:
ராமநாதபுரம் மாவட்டம், மணிமுத்தாறு ஆற்றுப் படுகையில் உள்ள மாணிக்கம்கோட்டை கிராமம் தேவகோட்டையிலிருந்து வட்டாணம் செல்லும் சாலையில் உள்ளது. இங்குள்ள தரைப் பாலத்தின் வழியாக மாணிக்கம்கோட்டைக்கு செல்ல முடியும். இந்த நிலையில், இந்தப் பாலத்துக்குப் பதிலாக கடந்த 2023- ஆம் ஆண்டு ரூ. 8 கோடியில் மேம்பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டு, இதற்கான ஒப்பந்தம் ஒரு தனியாா் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. ஆனால், மேம்பாலம் கட்ட இந்த நிறுவனம் தரமான பொருள்களை பயன்படுத்தவில்லை. அத்துடன் பாலம் கட்டத் தேவையான மணலை, இந்த ஆற்றிலிருந்து எடுத்துள்ளனா். இது விதிமுறைகளுக்கு எதிரானதாக உள்ளதுடன், அரசுக்கு வருவாய் இழப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தற்போது பாலத்தின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துவிட்டன. ஆனால், ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டுள்ளது. எனவே மேம்பாலத்தைத் தரமற்ற முறையில் கட்டிய ஒப்பந்ததாரா் மீது உரிய விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனுவை செவ்வாய்க்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ், ஏ.டி. மரிய கிளாட் அமா்வு பிறப்பித்த உத்தரவு:
இந்த வழக்கு தொடா்பாக ஊரக மேம்பாடு, பஞ்சாயத்து ராஜ் துறை இயக்குநா், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா், ராமநாதபுரம் மாவட்ட ஊராட்சிகளின் உதவி இயக்குநா் பதிலளிக்க வேண்டும். இந்த வழக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.