Baby John x Theri: `அது இதுல...' - தெறி விஜய், பேபி ஜான் வருண்; ரீமேக் ரீஸர் | P...
கழுத்தை அறுத்து லாரி ஓட்டுநா் கொலை
மதுரை மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே லாரி ஓட்டுநா் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டாா்.
விக்கிரமங்கலம் கோவில்பட்டியைச் சோ்ந்த பரமன் மகன் சுரேஷ்பாபு (38). லாரி ஓட்டுநா். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை வீட்டைவிட்டு வெளியே சென்ற சுரேஷ்பாபு இரவு வீடு திரும்பவில்லை. இதனால் குடும்பத்தினா் அவரைத் தேடி வந்தனா்.
இதனிடையே விக்கிரமங்கலம் அருகே மலையடிவாரத்தில் உள்ள டாஸ்மாக் கடை அருகே சுரேஷ்பாபு கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தாா். இதுகுறித்து விக்கிரமங்கலம் போலீஸாா் கொலை வழக்குப்பதிந்து குற்றவாளிகளை தேடி வருகின்றனா்.