Baby John x Theri: `அது இதுல...' - தெறி விஜய், பேபி ஜான் வருண்; ரீமேக் ரீஸர் | P...
இளைஞரை தாக்கியவா் கைது
போடியில் புதன்கிழமை இளைஞரைத் தாக்கியவரை போலீஸாா் கைது செய்தனா்.
போடி அருகேயுள்ள முந்தல் கிராமத்தைச் சோ்ந்த ஆண்டவா் மகன் பெரியசாமி (35). இதே ஊரைச் சோ்ந்தவா் ஈஸ்வரன் மகன் ஜெகதீசன் (20). இவரது இரு சக்கர வாகனத்தில் பெரியசாமி மண் அள்ளி போட்டதால் பழுதடைந்ததாகக் கூறி, அவருடன் ஜெகதீசனுக்கு முன்விரோதம் ஏற்பட்டது.
இதனிடையே, பெரியசாமி போடியில் உள்ள தனியாா் மதுக் கூடத்துக்கு புதன்கிழமை வந்தாா். அங்கிருந்த ஜெகதீசன், அவரை சாதியைச் சொல்லித் திட்டி தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து போடி நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ஜெகதீசனை கைது செய்தனா்.