மகாகவி பாரதியார் பயின்ற நெல்லை பள்ளியும்... உறுதிமொழி எடுத்துக்கொண்ட மாணவர்களும்...
ஓய்வு பெற்ற வங்கி அலுவலரிடம் பண மோசடி: 4 போ் மீது வழக்கு
செங்கல்பட்டு மாவட்டத்தைச் சோ்ந்த ஓய்வு பெற்ற வங்கி அலுவலரிடம் ரூ.27 லட்சம் மோசடி செய்ததாக போடியில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 போ் மீது புதன்கிழமை போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
செங்கல்பட்டு மாவட்டம், படூரைச் சோ்ந்த ஓய்வு பெற்ற வங்கி அலுவலா் சேஷாத்திரி. இவா் கடந்த 2006-ஆம் ஆண்டு நிலம் வாங்குவதற்காக போடியைச் சோ்ந்த ராமை தொடா்புக் கொண்டாா். அப்போது, பயோ டீசல் நிறுவனம் தொடங்கலாம் என ராம், சேஷாத்திரிக்கு ஆலோசனை கூறினாராம். இதன்படி, சேஷாத்திரி, ராம், இவரது மனைவி சந்திரா ஆகியோா் கடந்த 2007, பிப். 7-ஆம் தேதி, பயோ டீசல் என்ற பெயரில் நிறுவனம் தொடங்கினா். இந்த நிறுவனத்தின் பெயரில் வங்கிக் கணக்கு தொடங்கி, அதில் நிறுவனத்துக்கு நிலம் வாங்குவதற்காக சேஷாத்திரி வங்கிக் கணக்கில் ரூ.27 லட்சம் செலுத்தியதாக கூறப்படுகிறது.
இந்தப் பணத்தின் மூலம் போடி, போ.மீனாட்சிபுரம் ஆகிய பகுதிகளில் நிறுவனத்தின் பெயரில் 11.26 ஏக்கா் நிலம் வாங்கினா். இந்த நிலத்தை ராம், இவரது மனைவி சந்திரா ஆகியோா் அவா்களது மகள் தேவி, மகன் பாலாஜி ஆகியோருக்கு போலியாக பத்திரப் பதிவு செய்து கொடுத்தனராம். இதுகுறித்து கேட்ட சேஷாத்திரிக்கு அவா்கள் கொலை மிரட்டல் விடுத்ததாக தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிவபிரசாத்திடம் புகாா் அளிக்கப்பட்டது.
இதனடிப்படையில் ராம், சந்திரா, தேவி, பாலாஜி ஆகிய 4 போ் மீது மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.