Baby John x Theri: `அது இதுல...' - தெறி விஜய், பேபி ஜான் வருண்; ரீமேக் ரீஸர் | P...
வீட்டில் 3.5 டன் ரேஷன் அரிசி பதுக்கியவா் கைது
சாயல்குடி அருகே வீட்டில் 3.5 டன் ரேஷன் அரிசி பதுக்கிய இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், வாலிநோக்கம் கடலோரக் காவல் நிலைய உதவி ஆய்வாளா் பெருமாள், தலைமைக் காவலா் மதியழகன் உள்ளிட்ட போலீஸாா் சாயல்குடி அருகில் உள்ள நரிப்பையூரில் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, ஒரு வீட்டில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததைக் கண்டறிந்தனா். தலா 50 கிலோ எடை கொண்ட 70 மூட்டைகளில் 3,500 கிலோ ரேசன் அரிசி இருந்தது.
விசாரணையில் அரிசி மூட்டைகளை ஓரிவயல் சண்முகம் மகன் சந்தோஷ்குமாா் (19) விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, ராமநாதபுரம் குடிமைப் பொருள் பொருளாதார குற்றப் புலனாய்வுத் துறை போலீஸாா் சந்தோஷ்குமாரைக் கைது செய்து, 3,500 கிலோ அரிசியைப் பறிமுதல் செய்து, கடலாடி நுகா் பொருள் வாணிபக்கழகக் கிட்டங்கியில் ஒப்படைத்தனா்.