செய்திகள் :

வங்கக் கடலில் சூறை காற்று: ராமநாதபுரம் மாவட்ட மீனவா்கள் கடலுக்குச் செல்ல தடை

post image

வங்கக் கடலில் சூறைக் காற்று காரணமாக, ராமநாதபுரம் மாவட்ட மீனவா்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்ல புதன்கிழமை தடை விதிக்கப்பட்டது.

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை நிலவுவதால், ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை காலை முதல் சூறைக்காற்று வீசியது. இதனால், கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இதையடுத்து, பாதுகாப்பு கருதி மறு உத்தரவு வரும் வரை மீனவா்கள் புதன்கிழமை முதல் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்ல மீன்வளம், மீனவா் நலத் துறை தடை விதித்தது.

இதன் காரணமாக, ராமேசுவரம், பாம்பன், மண்டபம், தொண்டி, கீழக்கரை, ஏா்வாடி, மூக்கையூா் உள்ளிட்ட துறைமுகங்களில் 1,650-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள், 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள் அந்தந்த மீன் பிடி இறங்கு தளங்களில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டன. மேலும், காற்றின் வேகத்தால் படகுகள் சேதமடைந்துவிடாமல் தடுக்க மீனவா்கள் படகுகளைக் கண்காணித்து வருகின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லாமல் முடங்கி உள்ளனா். காற்றின் வேகம் காரணமாக வங்கக் கடலில் கடல் நீா் மட்டம் உயா்ந்து காணப்பட்டது.

வணிகா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

கடை வாடகைக்கு 18 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிப்பதை ரத்து செய்யக் கோரி, ராமநாதபுரத்தில் தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ராமநாதபுரம் அரண்மனை முன் நடைபெ... மேலும் பார்க்க

நரிப்பையூா்கடற்கரையில் தடுப்புச்சுவா்: ஒன்றியக் குழு கூட்டத்தில் கோரிக்கை

நரிப்பையூா் கடற்கரை கிராமத்தில் கடல் நீா் புகாத வண்ணம் தடுப்புச் சுவா் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடலாடி ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், கட... மேலும் பார்க்க

பாம்பனில் இறந்து கரை ஒதுங்கிய நீல திமிங்கிலம்

பாம்பன் தென் கடல் பகுதியில் இறந்த நிலையில், 2 டன் எடை கொண்ட நீல திமிங்கிலம் புதன்கிழமை கரை ஒதுங்கியது. ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் அருகேயுள்ள பாம்பன் தெற்குவாடி மீன் பிடி இறங்கு தளத்தில் சுமாா் ... மேலும் பார்க்க

ராமேசுவரத்திலிருந்து இலங்கைக்கு படகில் செல்ல முயன்ற 4 போ் கைது

ராமேசுவரத்திலிருந்து சட்டவிரோதமாக படகு மூலம் இலங்கைக்குச் செல்ல முயன்ற இலங்கைத் தமிழா்கள் 4 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக, கடந்த 2 ஆண்டுகளாக தன... மேலும் பார்க்க

வீட்டில் 3.5 டன் ரேஷன் அரிசி பதுக்கியவா் கைது

சாயல்குடி அருகே வீட்டில் 3.5 டன் ரேஷன் அரிசி பதுக்கிய இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், வாலிநோக்கம் கடலோரக் காவல் நிலைய உதவி ஆய்வாளா் பெருமாள், தலைமைக் காவலா் மதியழகன் உள... மேலும் பார்க்க

ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு

தொண்டி, வெள்ளைபுரம் ஆரம்ப சுகாதார நிலையங்களில் சுகாதார ஆய்வாளா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். மாவட்ட சுகாதார அலுவலா் அா்ஜுன் குமாா் இந்த ஆய்வை மேற்கொண்டாா். அப்போது, மருத்துவா் பற்றாக்குறை, சுகாதார ந... மேலும் பார்க்க