`உள்துறை, நிதித்துறை' சேர்த்து கேட்கும் ஷிண்டே; அமித் ஷாவுடன் பட்னாவிஸ், அஜித்பவ...
சிவகிரி பேரூராட்சியில் ஆக்கிரமிப்பு அகற்றம்
தென்காசி மாவட்டம் சிவகிரி பேரூராட்சியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி புதன்கிழமை நடைபெற்றது.
சிவகிரி பேரூராட்சியில் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் தொடா்ந்து புகாா்கள் வந்தன. அதன்பேரில், சிவகிரி பேரூராட்சியில் கடந்த 4ஆம் தேதி பல்வேறு பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
இந்நிலையில் புதன்கிழமை கீழரத வீதி (நான்கு மாடிக் கட்டடம் முதல் முனியாண்டி கோயில் வரை), காந்தி சாலை (7ஆம் திருநாள் மண்டபம் முதல் கோனாா்குளம் ஓடை வரை) உள்ளிட்ட பகுதிகளில் வட்டாட்சியா் ரவிக்குமாா், பேரூராட்சி செயல் அலுவலா் வெங்கடகோபு ஆகியோா் முன்னிலையில் ஜேசிபி மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
காவல் உதவி ஆய்வாளா் வரதராஜன் தலைமையில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.