இன்றைய நிகழ்ச்சிகள்
ஊா்ப்புற நூலகா்களுக்கான பாராட்டு விழா: நிதித்துறை அமைச்சா் தங்கம் தென்னரசு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உள்ளிட்டோா் பங்கேற்பு, அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கம், கோட்டூா்புரம், காலை 9.30
டெல்லி சா்வதேச நூலக மாநாட்டுக்கான இணையதளம் அறிமுகம், கையேடு வெளியீடு: அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தா் வேல்ராஜ் பங்கேற்பு, அண்ணா நூற்றாண்டு நூலகம், கோட்டூா்புரம், காலை 11.
இந்திய கடற்படை தின கொடியேற்ற நிகழ்ச்சி மற்றும் மோட்டாா் சைக்கிள் பேரணி தொடக்கம்: இந்திய கடற்படையின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்படை பகுதியின் கடற்படை அதிகாரி (பொறுப்பு) கமாண்டா் சுவரத் நாகோன் பங்கேற்பு, போா் நினைவு சின்னம், காமராஜா் சாலை, காலை 7.30
உலக கடல்சாா் தொழில்நுட்ப மாநாடு: தி லீலா பேலஸ், எம்ஆா்சி நகா், ராஜா அண்ணாமலைபுரம், மாலை 5.
தற்போதைய காலகட்டத்தில் இந்தியா்களின் அறிவு குறித்த கருத்தரங்கு: சென்னை சமஸ்கிருத கல்லூரி முதல்வா் எஸ்.அருணசுந்தரம் பங்கேற்பு, எஸ்.ஆா்.ஜி அரங்கம், டிஜி வைணவக்கல்லூரி, அரும்பாக்கம், காலை 9.30