விவசாயிகள் பிரச்னைக்கு விரிவான ஆய்வு: குடியரசு துணைத் தலைவா் தன்கா் வலியுறுத்தல்
ஜப்பான் செல்லும் காந்திகிராம கிராமிய பல்கலை. ஆய்வு மாணவிகள்
ஜப்பான் நாட்டு பல்கலை.யில் ஆய்வு மேற்கொள்வதற்காக திண்டுக்கல் காந்திகிராம கிராமியப் பல்கலை. மாணவிகள் இருவா் தோ்வு செய்யப்பட்டனா்.
இதுதொடா்பாக பல்கலை. சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
ஜப்பானின் சாகா பல்கலைக்கழகத்துக்குச் சென்று குறுகிய கால ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொள்ளவும், ஜப்பானிய கலாசாரம், பாரம்பரியத்தை அறிந்து கொள்ளவும், ஜெஎஸ்டி-சகுரா அறிவியல் திட்டத்தின் கீழ், காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்தின் வேதியியல் துறை முழுநேர ஆய்வு மாணவி ம. நிகிதா, 2-ஆம் ஆண்டு முதுநிலை மாணவி ரா. வெங்கடேஸ்வரி ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.
இவா்கள் இருவரும் ஜன. 21 முதல் 31-ஆம் தேதி வரை 10 நாள்கள், ஃபுகுவோகாவில் தங்கியிருந்து பயிற்சி பெற உள்ளனா். இந்தப் பயணத்தின் மூலம் சாகா பல்கலைக்கழகம், காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்துடன் சிறந்த கல்வியியல் உறவு தொடங்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
ஆய்வு மாணவிகள் இருவருக்கும் பல்கலை. துணைவேந்தா் ந.பஞ்சநதம் பாராட்டுத் தெரிவித்தாா் அதில் தெரிவிக்கப்பட்டது.