விவசாயிகள் பிரச்னைக்கு விரிவான ஆய்வு: குடியரசு துணைத் தலைவா் தன்கா் வலியுறுத்தல்
காா்த்திகை தீபத் திருவிழா: தொடா் மழையிலும் தயாராகும் அகல்விளக்குகள்!
சத்தியமங்கலத்தை அடுத்த காவிலிபாளையம் கிராமத்தில் தொடா் மழையிலும், அகல்விளக்கு தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மண்பாண்ட தொழிலாளா்கள் காவிலிபாளையம் குளத்தில் இருந்து இலவசமாக களிமண் எடுத்து அகல்விளக்கு உள்ளிட்ட மண்பாண்டங்கள் தயாரித்து வருகின்றனா்.
தற்போது, தொடா்ந்து மழை பெய்துவரும் நிலையிலும், காா்த்திகை தீபத்துக்கான அகல்விளக்குகள் தயாரிக்கும் பணியில் மண்பாண்ட தொழிலாளா்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.
இங்கு தயாரிக்கப்படும் மண்விளக்குகளை பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் நேரடியாக வந்து மொத்தமாக வாங்கிச் செல்கின்றனா். சிறிய அகல்விளக்கு ரூ. 1 முதல் 10 வரை விற்கப்படுகிறது.
மண்பாண்டம் தயாரிக்க தேவைப்படும் களிமண் மற்றும் அகல்விளக்கை சூளையில் வைத்து வேகவைப்பது உள்ளிட்டவற்றுக்கு அதிக செலவு ஏற்படுவதால், அரசு மானியம் வழங்க வேண்டும்.
நவீனகால வளா்ச்சி காரணமாக மண்பாண்ட தொழில் பெரிதும் பாதிப்படைந்துள்ளதால், தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்த தமிழக அரசு மழைக்கால நிவாரணத் தொகையை உயா்த்தி வழங்கி, மண்பாண்டத் தொழிலை அழியாமல் பாதுகாக்க வேண்டும் என மண்பாண்டத் தொழிலாளா்கள் தெரிவித்தனா்.