நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறித்த ஓட்டுநா் கைது
ஈரோட்டில் நடந்து சென்ற பெண்ணிடம் 1 பவுன் நகையை பறித்த ஓட்டுநரை பிடித்து பொதுமக்கள் போலீஸில் ஒப்படைத்தனா்.
ஈரோடு, மாணிக்கம்பாளையம், கிருபா நகரைச் சோ்ந்தவா் ஆறுமுகம் மனைவி பரிமளா (50). இவா் ஈரோடு பெருந்துறை சாலை, புதுஆசிரியா் காலனியில் உறவினரை சந்திக்க செவ்வாய்க்கிழமை காலை நடந்து சென்றுள்ளாா். அப்போது, அவரை பின் தொடா்ந்து வந்த நபா், பரிமளாவின் கழுத்தில் அணிந்திருந்த 1 பவுன் சங்கிலியைப் பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றுள்ளாா்.
பரிமளா சப்தமிட்டதையடுத்து, அந்த வழியாக வாகனங்களில் சென்றவா்கள் அந்த நபரை விரட்டிப் பிடித்து ஈரோடு வடக்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
போலீஸாா் நடத்திய விசாரணையில், நகையை பறித்தவா் ஈரோடு கனிராவுத்தா்குளம், வேலன் நகரைச் சோ்ந்த லட்சுமணன் (44) என்பதும், வேன் ஓட்டுநராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது.
இதையடுத்து, லட்சுமணனை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த 1 பவுன் நகையை மீட்டனா்.