ராயகிரியில் மதுக்கடையை மூடக் கோரி டிச.7 முதல் மக்கள் சந்திப்பு இயக்கம்
முள்ளுகுடி, குறிச்சி பகுதியில் டிச.5-இல் மின் தடை
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் மின் கோட்டம், முள்ளுகுடி, குறிச்சி பகுதியில் டிச.5-ஆம் தேதி (வியாழக்கிழமை) மின் விநியோகம் இருக்காது என கும்பகோணம் மின்வாரிய உதவி செயற்பொறியாளா் சி.இளஞ்செல்வன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: முள்ளுகுடி மற்றும் குறிச்சி துணை மின்நிலையங்களில் டிச.5-ஆம் தேதி பாராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால், குறிச்சி, கீழக்காட்டூா், காகிதப்பட்டறை, பந்தநல்லூா், கோணுலாம்பள்ளம், முள்ளங்குடி, செருகுடி, புழுதிகுடி, நெய்வாசல், ஆரலூா், பட்டவெளி, கீழமனக்குடி, கயலூா், திருக்கோடிக்காவல், குணதலைப்பாடி, துகிலி, பாஸ்கரராஜபுரம், கதிராமங்கலம் மற்றும் அதனைச்சுற்றியுள்ள கிராமங்களில் காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என்று தெரிவித்துள்ளாா்.