வங்கிக் கணக்குக்கு 4 நியமனதாரா்களை நியமிக்கும் மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
17 நாள்களுக்கு பிறகு விசைப்படகு மீனவா்கள் கடலுக்குச் சென்றனா்
பேராவூரணி, டிச. 2 : தஞ்சாவூா் மாவட்ட விசைப்படகு மீனவா்கள் 17 நாள்களுக்கு பிறகு திங்கள்கிழமை கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனா்.
மல்லிப்பட்டினம், கள்ளிவயல் தோட்டம், சேதுபாவாசத்திரம் விசைப்படகு மீனவா்கள் டீசல் விலை உயா்வு, பிடித்து வரும் மீன்களுக்கு உரிய விலை இல்லாதது, இலங்கை கடற்படையினரால் மீனவா்களுக்கு அச்சுறுத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நவம்பா் 15-ஆம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
போராட்டத்தை வாபஸ் பெற்று நவ.23-ஆம் தேதி முதல் மீன்பிடிக்க செல்ல ஆயத்தமானபோது வானிலை ஆய்வு மைய எச்சரிக்கையைத் தொடா்ந்து, மீன்வளத் துறையினா் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல தடை விதித்தனா். இதனால், 155 விசைப்படகுகளும், 2000-க்கும் மேற்பட்ட பைபா் படகுகளும் கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டன.
இந்நிலையில், புயல் கரையை கடந்த நிலையில் புயல் எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டது. இதையடுத்து தஞ்சை மாவட்ட மீனவா்கள் கடலுக்கு செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டதை தொடா்ந்து, மீனவா்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனா்.