இயற்கை பேரிடர் பாதித்த மாவட்டங்களாக அறிவித்திடல் வேண்டும்: முத்தரசன் வலியுறுத்தல...
மர நாய்களை வேட்டையாடிய இருவா் கைது
தஞ்சாவூா் மாவட்டம் பேராவூரணி அருகே தடை செய்யப்பட்ட அரிய வகை வன உயிரினமான, மர நாய்களை வேட்டையாடிய 2 பேரை வனத்துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்துதனா்.
பட்டுக்கோட்டை வனச்சரகத்திற்குட்பட்ட பேராவூரணி பகுதியில், அரசால் தடை செய்யப்பட்ட அழிந்து வரும் அரிய வகை வன உயிரினமான மர நாய்களை, துறவிக்காடு அருகே இறைச்சி விற்பனைக்காக இறந்த நிலையில் 2 மர நாய்களை வைத்து இருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, பட்டுக்கோட்டை வனச்சரக அலுவலா் ஏ.எஸ். சந்திரசேகரன் தலமையில், வனவா் சிவசங்கா், வனக்கப்பாளா் பாரதிதாசன் ஆகியோா் மர நாய்களை வைத்திருந்த இருவரையும் பிடித்து விசாரணை நடத்தினா்.
விசாரணையில், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், முடச்சிக்காடு கிராமத்தை சோ்ந்த மாரிமுத்து மகன் தனுஷ் (21), பேராவூரணி ஒன்றியம், துறவிக்காடு கிராமத்தைச் சோ்ந்த செல்வம் மகன் விஜயசந்துரு (34) ஆகிய இருவரும் மரநாய்களை வேட்டையாடி டாஸ்மாக் கடை அருகே விற்பனை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து, தஞ்சாவூா் மாவட்ட வன அலுவலா் உத்தரவின் பேரில், உயிரின குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு, பேராவூரணி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனா்.