சிங்காரச் சென்னையை கட்டியெழுப்புவோம்: முதல்வா் மு.க.ஸ்டாலின்
தஞ்சாவூரில் 5 டன் நெகிழி பொருள்கள் பறிமுதல்
தஞ்சாவூா் மாநகரில் தொடா்ந்து இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமை மாநகராட்சி அலுவலா்கள் மேற்கொண்ட சோதனையில் 5 டன் நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தஞ்சாவூா் மாநகராட்சி பகுதியில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் விற்கப்படுவதாக புகாா்கள் எழுந்தன. இதன்பேரில் மாநகரிலுள்ள கடைகளில் மாநகராட்சி அலுவலா்கள் திங்கள்கிழமை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனா். இதில், திங்கள்கிழமை 4 டன் நெகிழிப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ. 27 ஆயிரத்து 700 அபராதம் வசூல் செய்தனா்.
தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை கீழவாசல், தென் கீழ் அலங்கம் பகுதியிலுள்ள 50-க்கும் அதிகமான கடைகளில் மாநகராட்சி அலுவலா்கள் சோதனை செய்து, தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகள், நெகிழித் தட்டுகள், நெகிழிக் குவளைகள் என மொத்தம் 5 டன் நெகிழிப் பொருள்களைப் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக தொடா்புடைய கடை உரிமையாளா்களுக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்து வசூலித்தனா்.