ஆடுதுறை அருகே நாளை ஐயப்பன் கோயில் குடமுழுக்கு
தஞ்சாவூா் மாவட்டம், ஆடுதுறை அருகேயுள்ள 48 மணலூா் ஐயப்ப சுவாமி கோயிலில் வியாழக்கிழமை குடமுழுக்கு நடைபெறுகிறது.
இதையொட்டி இக்கோயிலில் செவ்வாய்க்கிழமை விக்னேஸ்வர பூஜை தொடங்கியது. மணலூா் காவிரி படித்துறையில் இருந்து 36 நதிகளின் புனித நீா் மற்றும் காவிரி புனித நீா் கடங்கள் சிறப்பு பூஜையுடன் வாண வேடிக்கை முழங்க ஊா்வலமாக வந்தன.
மாலை யாகசாலை பிரவேச நிகழ்ச்சியுடன் முதல் கால யாக பூஜைகளை ராஜூ சிவாச்சாரியாா் தலைமையில் செய்தனா். நிகழ்வில் திருப்பனந்தாள் காசி திருமடம் இளவரசு ஸ்ரீலஸ்ரீ சபாபதி தம்பிரான் சுவாமிகள், சிவராமபுரம் பஞ்சமுக ஆஞ்சநேயா் கோயில் ஸ்தாபகா் ஸ்ரீமத் வாயு சித்த ராமானுஜ ஜீயா் சுவாமிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.