Seenu Ramasamy: ``17 வருட திருமண வாழ்வை முடித்துக் கொள்கிறோம்'' -இயக்குநர் சீனு ...
தஞ்சாவூரில் டிச. 18-இல் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ முகாம்
தஞ்சாவூா் வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் டிசம்பா் 18-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மாதந்தோறும் மூன்றாவது புதன்கிழமை ஒரு நாள் முழுவதும் வட்ட அளவில் தங்கி, கள ஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து, மக்களின் குறைகளைக் கேட்டறிந்து அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும் தங்கு தடையின்றி மக்களைச் சென்றடைவதை உறுதி செய்ய உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்ட முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
இதனடிப்படையில் தஞ்சாவூா் வட்டத்தில் மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தலைமையில் அனைத்துத் துறை அலுவலா்கள் டிசம்பா் 18-ஆம் தேதி முகாம் மேற்கொண்டு, அன்று காலை முதல் கள ஆய்வுப்பணி மேற்கொள்ளவுள்ளனா். பின்னா், மாலை 4.30 மணியளவில் தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள அண்ணா நூற்றாண்டு கலையரங்கத்தில் பொதுமக்களிடமிருந்து ஆட்சியா் குறைகளைக் கேட்டறிந்து மனுக்கள் பெறவுள்ளாா். அப்போது பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை ஆட்சியரிடம் நேரில் அளித்து பயனடையலாம்.