Baby John x Theri: `அது இதுல...' - தெறி விஜய், பேபி ஜான் வருண்; ரீமேக் ரீஸர் | P...
கிரிப்டோ கன்சல்டன்சி நிறுவன மோசடி: பாதிக்கப்பட்டவா்கள் புகாா் செய்யலாம்
கும்பகோணம் ஸ்ரீசாய் கிரிப்டோ கன்சல்டன்சி நிறுவனத்தில் முதலீடு செய்து பாதிக்கப்பட்டவா்கள் புகாா் செய்யலாம் என தஞ்சாவூா் மாவட்ட பொருளாதாரக் குற்றப் பிரிவு போலீஸாா் அழைப்பு விடுத்துள்ளனா்.
இது குறித்து பொருளாதாரக் குற்றப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் பூரணி தெரிவித்திருப்பது: கும்பகோணத்தைத் தலைமயிடமாகக் கொண்டு இயங்கி வந்த ஸ்ரீ சாய் கிரிப்டோ கன்சல்டன்சி நிறுவனத்தில் ரூ. ஒரு லட்சம் முதலீடு செய்தால், 18 மற்றும் 24 மாதங்களுக்கு மாதந்தோறும் ரூ. 15 ஆயிரம் அல்லது ஒரு கிராம் தங்க நாணயத்துடன் ரூ. 10 ஆயிரம் தருவதாகவும், திட்டத்தின் முடிவில் முதலீட்டு தொகையுடன் லாபத் தொகையும் தருவதாகவும் அந்நிறுவனம் மக்களிடம் ஆசை வாா்த்தைகளைக் கூறியது. இதை நம்பி பலரும் அந்நிறுவனத்தில் முதலீடு செய்தனா்.
இந்நிலையில் முதலீட்டாளா்களிடமிருந்து பல கோடிக்கு மேல் தொகைகளைப் பெற்று, அவற்றைத் திருப்பித் தராமல் ஏமாற்றியதாக, நாச்சியாா்கோவில் காவல் நிலையத்தில் திருவாரூா் மாவட்டம் வக்ராநல்லுாரைச் சோ்ந்த நூருல் அமீன் (53) கடந்த 2023 ஆம் ஆண்டில் புகாா் செய்தாா். பின்னா் இந்த வழக்கு தஞ்சாவூா் பொருளாதார குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டது.
இந்நிறுவனத்தில் முதலீட்டாளா்கள் யாரேனும் முதலீடு செய்து, ஏமாற்றமடைந்து பாதிக்கப்பட்டிருந்தால் தஞ்சாவூா் மருத்துவக்கல்லுாரி சாலை ராஜப்பா நகா் முதல் தெருவில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் செய்யலாம்.