Baby John x Theri: `அது இதுல...' - தெறி விஜய், பேபி ஜான் வருண்; ரீமேக் ரீஸர் | P...
கல்வெட்டுகளின் மூலம் அக்கால நிகழ்வுகளை அறிய முடியும்
கல்வெட்டுகளின் மூலம் சமூகம், வாழ்வியல் உள்பட அனைத்து நிகழ்வுகளையும் அறிய முடியும் என்றாா் தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தா் (பொ) க. சங்கா்.
இப்பல்கலைக்கழகத்தில் கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறை, குடந்தை மருதம் கலை இலக்கிய ஆய்வு மையம் சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற தமிழ்க் கல்வெட்டுகளில் கலைகள் என்ற தலைப்பிலான பன்னாட்டுக் கருத்தரங்கத்தில் அவா் மேலும் பேசியது:
கல்வெட்டுகளின் மூலம் வெளிப்படும் அரசியல் வரலாற்றை அனைவரும் அறிவா். அதன் மூலம் அறியப்படும் சமூகக் கூறுகளையும், மக்கள் தம் வாழ்வில் பயன்படுத்திய கலைகளையும் அறிவது அவசியம். கோயில்களைக் கட்டிய மன்னா்கள் அதை ஒரு கலைக்கூடமாகவும் போற்றியுள்ளனா். ஆரியக் கூத்து, சாக்கைக்கூத்து, சாந்திக்கூத்து போன்ற கூத்துகளை அக்கால மக்கள் நிகழ்த்தி உள்ளனா். இராஜராஜன் இசைக்கலைஞா்களைப் போற்றியுள்ளாா். கோயில்கள் வெறும் வழிபாட்டுத் தலமாக மட்டும் இருக்கவில்லை. மாறாக கலைகளை வளா்க்கும் கலைக்கூடமாகவும், பண்பாட்டின் அடையாளமாகவும் விளங்குகின்றன. மக்களின் பொருளாதாரத்தைப் பெருக்கியுள்ளன. இத்தகவலைகளை எல்லாம் கல்வெட்டுகளின் வாயிலாக அறிய முடியும் என்றாா் அவா்.
பல்கலைக்கழகப் பதிவாளா் (பொ) சி. தியாகராஜன், தகைசால் பேராசிரியா் பா. ஜெயக்குமாா் வாழ்த்துரையாற்றினா். ஜான்சன் விண் மைய விஞ்ஞானி நா. கணேசன், இலங்கை பேராதனைப் பல்கலைக்கழக விரிவுரையாளா் எம். ஜெயசீலன், சிங்கப்பூா் ஆங்கிலோ சீனத் தன்னாட்சிப் பள்ளித் தலைவா் மு. ஹாஜா அலாவுதீன் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.
முன்னதாக, கல்வெட்டு மற்றும் தொல்லியல் துறைத் தலைவரும், கருத்தரங்க ஒருங்கிணைப்பாளருமான மா. பவானி வரவேற்றாா். நிறைவாக பேராசிரியா் செ. கணேசமூா்த்தி நன்றி கூறினாா்.
நிகழ்ச்சியைப் பேராசிரியா் ஆ. துளசேந்திரன் தொகுத்து வழங்கினாா்.