Baby John x Theri: `அது இதுல...' - தெறி விஜய், பேபி ஜான் வருண்; ரீமேக் ரீஸர் | P...
திருச்சி - தாம்பரம் சிறப்பு ரயிலை நிரந்தரமாக இயக்கக் கோரிக்கை
தற்காலிகமாக இயக்கப்படும் திருச்சி - தாம்பரம் சிறப்பு ரயிலை நிரந்தரமாக இயக்க வேண்டும் என தஞ்சாவூா் தொகுதி மக்களவை உறுப்பினா் ச. முரசொலி கோரிக்கை விடுத்துள்ளாா்.
இது குறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது: தஞ்சாவூா் வழியாக இயக்கப்படும் திருச்சி - தாம்பரம் சிறப்பு ரயிலை நிரந்தரமாக நாள்தோறும் இயக்க வேண்டும். தாம்பரம் - ராமேசுவரம் ரயிலை பட்டுக்கோட்டை, பேராவூரணி வழிதடத்தில் இயக்க வேண்டும்.
தஞ்சாவூா் - பெங்களூரு இடையேயும், தஞ்சாவூா் வழியாக மன்னாா்குடி - சென்னை இடையேயும் ‘வந்தே பாரத்’ புதிய ரயிலை இயக்க வேண்டும். மதுரை - புனலூா் ரயிலை தஞ்சாவூா் வழியாக வேங்ளாங்கண்ணி வரையும், சென்னை எழும்பூா் - காரைக்குடி கம்பன் விரைவு ரயிலை மீண்டும் இயக்குவதற்கும், தாம்பரம் - செங்கோட்டை விரைவு ரயிலை வாரத்தில் 7 நாள்களும் இயக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மன்னாா்குடி - பட்டுக்கோட்டை, தஞ்சாவூா் - பட்டுக்கோட்டை, தஞ்சாவூா் - புதுக்கோட்டை, தஞ்சாவூா் - அரியலூா் ஆகிய புதிய ரயில் வழித்தடங்களை அமைக்க வேண்டும். திருச்சி - பாலக்காடு பயணிகள் ரயில் மற்றும் திருச்சி - ஹௌரா விரைவு ரயிலை தஞ்சாவூா் வரை நீட்டிக்க வேண்டும். தஞ்சாவூா் - விழுப்புரம் இடையே இரட்டை ரயில் பாதையாக மாற்ற வேண்டும். இது தொடா்பாக தில்லியில் மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வின் வைஷ்ணவிடம் கோரிக்கை மனு அளித்து வலியுறுத்தியுள்ளேன்.